பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

307

மணியம்மாள் தனது பழக்கத்தின்படி உயர்தர இங்கிலீஷ் சோப்பி னால் தனது முகத்தைப் பளிச்சென்று சுத்தம் செய்துகொண்டு, துல்லியமான வெள்ளை மஸ்லின் புடவை, வெள்ளை சில்கினா லான ஜாக்கெட் முதலிய ஆடைகளைத் தரித்து, தங்க விளிம் புள்ள மூக்குக் கண்ணாடி, தங்க ஒட்டியாணம், வேறு இரண் டொரு தங்க நகைகள் ஆகிய ஆபரணங்களை மாத்திரம் அணிந்து கொண்டு, காலில் பூட்ஸ் என்ற இங்கிலீஷ் பாதரக்ஷையைத் தரித்திருந்தாள். முகத்தில் மஞ்சள், குங்குமமும், அல்லது சாந்துத் திலகம் முதலிய மங்களக்குறி எதுவும் காணப்படவில்லை. ஆயினும் அவள் அவ்வாறு சுத்தமாகவும் மிதமாகவும் ஆடையாபரணங்கள் தரித்து ஒரே வெண்மைத் தோற்றமாக இருந்த காட்சி குடமல்லிகை, அல்லது, வெண்தாமரை முதலிய புஷ்பங்கள் மலரும் போது தோற்றுவிக்கும் அழகு, புதுமை, நிர்மலம், மிருதுத்வம் முதலிய குணங்களை வெளிப்படுத்திய தன்றி, சகலமான கலைகளுக்கும் உற்பத்தி ஸ்தானமான சரஸ்வதியைப் பற்றிக் கூறப்பட்டுள்ள,

[வெண்பா]

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியாசனத் திருத்தி யரசரோ டெம்மைச்
சரியாசனத்தில் வைத்த தாய்.

என்ற செய்யுளை நினைப்பூட்டக் கூடியதாக இருந்தது. இங்கிலீஷ் நாகரிகமே தோன்றாத பண்டைக் காலத்தில் நமது முன்னோர் கலைவாணியின் ஆடையாபரணங்கள் யாவும் வெண்மையாகவே இருக்கும் என்று கண்டு எழுதியிருக்க, தற்காலத்தில் இங்கிலிஷ் கல்வி கற்கும் மனோன்மணியம்மாளைப் போன்ற பெண் மக்கள் வெண்மைத் தோற்றத்தையே நாடுவது ஓர் அதிசயமன்று என்றே நாம் கொள்ள வேண்டும் அல்லவா.

அவ்வாறு ரயில்வே ஸ்டேஷனை அடைந்த தந்தையும் மகளும் உள்ளே போவதற்கு இரண்டு பிளாட்டாரம் டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டு உட்புறம் சென்றனர்.

எழும்பூர் ரெயில்வே ஸ்டேஷன் பிரம்மாண்டமான கட்டிடம் என்பதை நாம் கூறுவது மிகையாகாது. அது முக்கியமாக இரண்டு