பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

மாயா விநோதப் பரதேசி

வாம்பாள் சடக்கென்று பாய்ந்து தனது மாமிக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள். வேலாயுதம் பிள்ளையும், கண்ணப்பாவும் ஏககாலத்தில் தமது கைகளைக் குவித்து, “நமஸ்காரம். நமஸ்காரம். வாருங்கள்” என்று நிரம்பவும் பணிவாகவும் மரியாதையாகவும் பட்டாபிராம பிள்ளைக்குப் பிரதி உபசாரம் செய்தனர்.

உடனே வேலாயுதம் பிள்ளை மிகுந்த ஆவலோடு பேசத் தொடங்கி, “பையன் சங்கதி அதற்குப் பிறகு ஏதாவது தெரிந்ததா?” என்று வினவினார். அந்தக் கேள்விக்குப் பட்டாபிராம பிள்ளை கொடுத்த விடையையும், அதற்கு மேல், அவர்களுக்குள் நடந்த சம்பாஷணையையும் நாம் விஸ்தரித்துக் கூறுமுன், முதலாவது இரண்டாவது வகுப்புப் பிரயாணிகள் வெளியில் போய்க் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் மறைவாக நின்று கொண்டிருந்த நமது மனோன்மணியம்மாளது நிலைமையை நாம் முதலில் கவனிப்பது அவசியம்.

தனது மாமனார் மாமியர் முதலியோர் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு அவள் வந்திருந்தாள் என்பது தெரிந்த விஷயம். அதுவுமன்றி, மகா உத்தமி என்று புகழப்படுபவளான வடிவாம்பாள் எப்படி இருக்கிறாள் என்பதையும், முக்கியமாக அவளது நடையுடை பாவனைகள் எப்படி இருக்கின்றன என்பதையும் அறிய வேண்டும் என்பது அவளது விருப்பம் ஆதலால், ரயில் வண்டி வந்து நின்றவுடன், எல்லாக் கதவுகளும், ஒரே காலத்தில் திறந்து விடப்படவே, மனோன்மணியம்மாள் தனது பார்வையை நெடுகச் செலுத்தி அப்புறமும் இப்புறமுமாகப் பார்த்ததன்றி, தனது தந்தை எந்தப் பக்கமாகப் போகிறார் என்பதையும் கூர்ந்து கவனித்த வண்ணமாய் இருந்தாள். முதல் வகுப்பிலாவது, இரண்டாவது வகுப்பிலாவது அவர்கள் இருக்க வேண்டும் என்று அவள் எண்ணியதற்கு மாறாக அவர்கள் மூன்றாவது வகுப்பு வண்டியில் வந்ததைக் காணவே, மனோன்மணியம்மாளது மனத்திலிருந்த அருவருப்பு முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் அபாரமான ஐசுவரியம் படைத்தவர்களாக இருந்தும், ஓரிரவு முழுதும் 3-வது வகுப்பு வண்டியில் ஆடுமாடுகள் அடைபடுவது போல ஏராள