பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

மாயா விநோதப் பரதேசி

மான தனது தந்தை அத்தகைய சுத்த கர்னாடக மனிதரைக் கண்டு, தன்னைப் போல அருவருப்பும், அதிருப்தியும் கொள்ளாமல், அவர்களை நிரம்பவும் பணிந்து அவர்களைப் போலவே வணக்க வொடுக்கத்தோடு அவர்களிடம் நடந்து கொண்டது மனோன்மணியம்மாளுக்குப் பெருத்த அதிசயமாகவும் விந்தையாகவும் இருந்ததன்றி, அவர்களுக்குத் தனது தந்தையின் மீதும் ஒருவித ஆத்திரமும், அதிருப்தியும் உண்டாய்க் கொண்டிருந்தன. அவர்களது சம்பந்தம் தனக்கு உதவாது என்ற தீர்மானம் அவளது மனதில் உறுதியாக உண்டாகிவிட்டது ஆகையால், தான் அவர்களை அதற்கு மேல் கவனிப்பது அநாவசியம் என்று அவள் எண்ணினாள் ஆனாலும், அவர்கள் வண்டியில் ஏறிப்போகும் வரையில் தான் அவ்விடத்திலேயே இருந்து அவர்களது நடவடிக்கைகள் முழுதையும் நன்றாகக் கவனித்துக் கொண்டு பங்களாவிற்குப் போனால், தான் தனது தந்தையோடு வாதாடுவதற்குத் தேவையான விஷயங்கள் கிடைக்கும் என்று தீர்மானித்துக் கொண்டவளாய் அவர்கள் மீது வைத்த விழியை வாங்காமல் கவனித்துக் கொண்டே நின்றாள். அந்தச் சமயத்தில் அவளுக்குப் பின் பக்கத்தில், “அம்மா ஞானாம்பாளா அங்கே நிற்கிறது?” என்று ஒரு குரல் கேட்டது. ஜனக்கும்பலில் யாரோ தமது மனிதரை அழைக்கிறார் என்ற நினைவினால் மனோன்மணியம்மாள் பின்புறம் திரும்பிப் பாராமல் வேலாயுதம் பிள்ளை முதலியோரைப் பார்த்தபடியே நின்றாள்.

பின்புறத்தில் அதே குரல் முன்னிலும் அதிக சமீபத்தில் நெருங்கி, “அம்மா ஞானாம்பாள் உன்னைத் தான் கூப்பிடுகிறேன். அந்தப் பக்கத்தில் யாரைப் பார்க்கிறாய்?” என்று வினாவியது. தனக்கு மிகவும் பக்கத்தில் யார் வந்து நின்று அப்படிக் கூப்பிடுகிறார்கள் என்ற வியப்பினால் தூண்டப்பட்டவளாய் மனோன்மணியம்மாள் பக்கத்தில் தனது பார்வையைத் திருப்ப முயன்ற சமயத்தில், தனது கையில் ஏதோ ஒரு மூட்டையோடு வந்த ஒரு வயோதிக ஸ்திரீ முன்பக்கமாய் வந்து மனோன்மணியம்மாளின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். அடுத்த நிமிஷத்தில் அந்த ஸ்திரீயின் முகம் விகாரப்பட்டுப் போயிற்று. அவள் மிகுந்த கிலேசமும் அவமானமும் அடைந்தவள் போலக் காணப்பட்ட