பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

33

செய்தால், அவர் தாங்க மாட்டாமல் இறந்து போனாலும் போய்விடுவார். அவரும் அவருடைய சம்சாரமும் இறந்து போய்விட்டால், அவர்களுடைய பிள்ளைகள் நாட்டுப்பெண் முதலியோரின் அழகைக் கண்டு அவர்கள் ஆனந்தம் அடையாமல் அல்லவா போய்விடுவார்கள். ஆகையால், அவர்கள் இருவரும் இறந்து போகாதபடி சொற்பமான அங்கஹீனம் செய்ய வேண்டும். ஆனால் அது பார்ப்பவருக்கு வேடிக்கையாகவும் இருக்க வேண்டும். வேலாயுதம் பிள்ளையின் வலது காதையும், அவருடைய சம்சாரத்தின் இடது காதையும் அடியோடு அறுத்துப் போட்டுவிட வேண்டும். அதுவே போதுமானது. அதனால் அவர்கள் இறந்து போக மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இறக்காவிட்டாலும், அந்தக் காதறுந்த நாய்கள் வீட்டை விட்டு வெளியில் போக வெட்கப்படுவார்கள் ஆகையால், இறந்தவர்கள் போலவே வீட்டுக்குள் இருப்பார்கள். அவர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்த்து வயிறெரிந்து நரக வேதனை அனுபவிப்பதைவிட மேலான தண்டனை ஏதாவதிருக்குமா?

இடும்பன் சேர்வைகாரன்:-போதும். இந்தத் தண்டனையே எதேஷ்டமானது. ஆனால் எனக்கு ஒரு விஷயம் மாத்திரம் சந்தோஷமாக இருக்கிறது. இந்த நால்வரை தண்டிப்பதற்கும் ஒரே ஓர் அம்பட்டன் கத்தியே போதுமானதாகத் தாங்கள் யோசனை சொன்னீர்களே அதுதான் சந்தோஷம். இந்த வேலையை எல்லாம் நான் வெகு சுலபத்தில் முடிக்கிறேன். இவ்வளவு தூரம் சொன்னீர்களே, பட்டணத்தில் வேலாயுதம் பிள்ளையின் இளையமகன் கந்தசாமி இருக்கிறானே. அவனுக்கு மரியாதை ஒன்றும் செய்கிறதில்லையா? அவனுடைய பெண்ஜாதியைக் கொண்டு வந்ததே அவனுக்குப் போதுமான தண்டனை என்று விட்டுவிடப் போகிறீர்களா?

மாசிலாமணி:-இல்லை இல்லை. அவனைத்தான் மற்ற எல்லோரையும்விட அதிகமாக நாம் கெளரவப்படுத்த வேண்டும். தான் அதிகப் பணக்காரன் என்றும், படிப்பாளி என்றும், மேதாவி மா.வி.ப.11-3