பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மாயா விநோதப் பரதேசி

அங்கேயும் தமது ராஜ்யத்தை நிலை நாட்டுவார்கள் என்பது நிச்சயம். மனிதன் தனக்கு ஏற்பட்டுள்ள நிலைமையோடும், தனக்குக் கிடைக்கும் செல்வம், சுகம் முதலிய வற்றோடும் திருப்தி அடைந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற கொள்கைக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் வெகு தூரம்.

"தம்மினும் மிக்காரை நோக்கித் தமதுடைமை, அம்மா! பெரிதென்று அகமகிழ" வேண்டும் என்ற கொள்கையை நாம் கடைப்பிடித்து, அடக்கம், பணிவு, சாந்தம், மனத்திருப்தி முதலிய அரிய குணங்களை அப்பியசிப்பவர்கள். வெள்ளைக்காரர்களோ,

"மின்னனைய பொய்யுடலை நிலையென்றும், மை இலகு
விழிகொண்டு மயல் மூட்டும்
மன்னார்கள் இன்பமே மெய்யென்றும், வளர் மாட
மேல்வீடு சொர்க்க மென்றும்,
பொன்னை அழியாது வளர்பொருளென்றும் போற்றி இப்
பொய் வேஷம் மிகுதி காட்டிப்
பொறை, அறிவு, துறவு, ஈதல் ஆதி நற்குணமெலாம்
போக்கிலே போக விட்டு,"

இம்மை வாழ்க்கையிலேயே தமது முழுமனதையும் ஆயுளையும் செலுத்தும் குணமுடையவர்கள். நம்மவர்களோ இம்மைச்சுகத்தை நாடுகிறவர்களாக இருந்தாலும், சிறிது காலத்தில் அதனிடத்தில் விரக்தியும், வெறுப்பும் அடைந்து,

"தந்தை தாய் தமர் தாரம் மகவு எனும் இவையெலாம்
சந்தையில் கூட்டம்; இதிலோ
சந்தேகமில்லை; மணிமாட மாளிகை மேடை
சதுரங்க சேனையுடனே
வந்ததோர் வாழ்வும் ஓர் இந்திரஜாலக் கோலம்;
வஞ்சனை பொறாமை லோபம்
வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மலபாண்டமோ
வஞ்சனையிலாத கனவே."

என்ற உண்மையை சதாகாலமும் மனதில் வைத்து,