பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

51

உட்கார்ந்து கொண்டிருப்பதற்கே யோக்கியதை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொடுக்கப்படும் படிப்பு, தாமும் புருஷர்களுக்கு சமதையாக வெளியில் சென்று பொருள் தேடி வந்து சுயேச்சையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையை உண்டாக்கும் படிப்பாக இருக்கிறதோடு புருஷருக்கு அடங்கி, வீட்டின் பொறுப்பை ஏற்று, சகலமான காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதைேயே இழிவாகவும் கேவலத் தொழிலாகவும் மதிக்கத் தக்கதாக இருக்கிறது. ஸ்திரீகளும் புருஷரைப் போலக் கல்வி கற்று வெளியில் உத்தியோகம் பார்க்கப் போவதில், வீட்டில் ஒருவர் ஏற்றுச் செய்து வரும் பொறுப்பை ஒன்பது பேர் பங்கிட்டுக் கொள்ள நேருவதன்றி, குடும்ப ஒற்றுமை, குடும்ப வாஞ்சை, புருஷன் பெண்ஜாதி குழந்தைகள் முதலியோருடைய தேக போஷணை, தேக ஆரோக்கியம் முதலிய ஜீவாதாரமான அம்சங்கள் எல்லாம் நாஸ்தியாய்ப் போய்விடுகின்றன என்பது எளிதில் தெரியக்கூடிய விஷயம். உலகில் மிருகங்கள் பட்சிகள் பூச்சி புழுக்கள் மரம் செடிகொடிகள் முதலிய சகலமான சிருஷ்டியிலும் ஆண் பெண் சிருஷ்டிகள் இருக்கின்றன். நாம் அவைகளுள் எதைக் கவனித்துப் பார்த்தாலும், ஸ்திரீஜாதி நுட்ப மானதாகவும், புருஷஜாதி தாட்டியானதாகவும் இருக்கின்றன. ஸ்திரீஜாதி புருஷஜாதிக்கு அடங்கி இன்பங் கொடுப்பதாகவும், குழந்தைகளை வளர்ப்பதாகவும் இருக்கின்றன. புலி, கரடி முதலிய துஷ்ட விலங்குகளைக் கவனித்தாலும் சரி, பெண் விலங்குகளை இரை தேடவிடாமல் தமது இருப்பிடத்திலேயே விட்டு, ஆண் விலங்குகள் வெளியில் சென்று இரைதேடி வருகின்றன. அல்லது, ஆண் பெண் ஆகிய இரண்டும் வெளியில் சென்றாலும், ஆண் விலங்கே முன்னால் சென்று வேட்டையாடுகின்றது. பெண் விலங்கு பின்னால் நிற்கிறது. இதுவே இயற்கையான சிருஷ்டி நிலைமை. கடவுளின் சிருஷ்டியில் ஒவ்வொரு வேலையை ஒவ்வொரு வகுப்பினர் செய்ய வேண்டும் என்ற ஒரு முறைமையும் நியதியும் ஏற்பட்டிருக்கின்றன. முதலில் மனிதனுடைய உடம்பை எடுத்துக் கொள்வோம். அதில் கை ஒரு வேலையைச் செய்கிறது. நாம்