பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மாயா விநோதம் பரதேசி

கண்ணால் வாசனை பிடிக்க முடியாது. மூக்கால் பார்க்க முடியாது. இப்படி ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேகமான ஒவ்வொரு சக்தியும் கடமையும் அமைந்திருக்கின்றன. எல்லாவற்றையும் எல்லாம் செய்ய முடியுமா? எல்லோரும் அரசனாக முடியுமா?

இந்த இயற்கைப் பாகுபாட்டைக் கண்டே நம்மவர் ஸ்திரீகளுக்கு வேலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களோ எல்லோரும் சமம் என்றும், எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்யலாம் என்றும் எண்ணிக் குடும்ப வாழ்க்கையைப் பாழாக்குகின்றார்கள். அவர்களுடைய நாட்டில் அவர்கள் இத்தகைய கெடுதல்களால் அனுபவிக்கும் சங்கடங்களை நன்றாக உணர்ந்து இருந்தும், தங்களது கொள்கைகளை நமது நாட்டிலும் பரப்பி நம்முடைய ஸ்திரீகளையும், நமது குடும்ப வாழ்க்கையையும் சீர்குலைக்க முயலுகிறார்கள். அவர்களுடைய நாட்டில் மனிதன் எத்தகைய இழிவான ஜீவனோபாயத்தைச் செய்தாலும், அவனுக்கு இழிவு கிடையாது என்று மதிக்கிறார்கள். மனிதன் எந்தத் தொழிலைச் செய்தாவது ஏராளமான பணத்தைத் தேடித் தக்க முதலாளி ஆய்விட்டால், அவன் எல்லோராலும் நன்கு மதிக்கப்படும் கண்ணியவானாகி விடலாம். சகலமான மனிதரிலும் கேவலமான தொழிலைச் செய்யும் ஒரு தோட்டி, ஆயிரக் கணக்கான ஆள்களைத் தனக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு அந்தத் தொழிலை நிரம்பவும் திறமையாகச் செய்து ஏராளமாகப் பொருள் சம்பாதித்துப் பணக்காரனாகி விடுவானாகில், அவன் பார்லிமெண்டு மெம்பராய், பிரதான மந்திரி வேலைக்கு வந்து, சுயேச்சையாக அந்தத் தேச இராஜாங்க நிர்வாகத்தை நடத்தலாம். மேலான குடும்பத்தைச் சேர்ந்த சீமான்களுடைய பெண்ணை அவன் கலியாணம் செய்து கொள்ளலாம். அவர்களுடைய தேசத்தில் பணம் ஒன்று இருந்தால், அதனாலேயே ஒருவன் உயர்ந்த ஜாதியான் ஆகிவிடலாம். அவன் செய்யும் தொழில் எவ்வளவு ஈனத்தொழிலாக இருந்தாலும், அது அவனைப் பாதிக்காது. அவனால் அந்த ஈனத் தொழிலுக்கே ஒரு பெரிய மதிப்பு ஏற்பட்டுவிடும். செருப்புத் தைக்கும் சக்கிலியன், துணி தோய்க்கும் வண்ணான், பிணங்களைக் கல்லறைகளுக்கு எடுத்துக் கொண்டு போகும்