பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் வே.துரைசாமி ஐயங்கார்

55

தெரிந்து கொள்ளாமல், விலங்குகளைப் போல ஒருவருக்கொருவர் தேவையான போது ஒருவரை ஒருவர் உபயோகித்துக் கொண்டு மற்ற வேளைகளில் ஒருவருக்கொருவர் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் அவரவர் சுயேச்சையாகப் பிறருடன் சம்பந்தம் வைத்துக் கொண்டு திரிவதே வெள்ளைக்காரருடைய நாட்டில் பெரும்பாலும் நடந்து வரும் குடும்ப வாழ்க்கை. ஒருவனுடைய மனைவி இன்னொரு புருஷனோடு கைகோர்த்துக் கொண்டு தனிமையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவளுக்குத் தனது நண்பரிடம் இருந்து வரும் கடிதங்களை அவளுடைய புருஷன் பிரித்து பார்ப்பது கூடாது.

அது போலவே, வயது வந்த ஒரு பெண் பல யெளவனப் புருஷர்களோடும் பழக்கம் வைத்துக் கொண்டு அவர்களோடு தனிமையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற ஓர் ஆதிக்கமும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. ஒரு ஸ்திரீயும் அன்னிய புருஷன் ஒருவனும் ஒன்றாகச் சென்று பழகுவதில், பார்ப்பவருக்கு சம்சயம் உண்டாகாதபடி ஒருவரிடத்து ஒருவர் மரியாதையாகவும் அன்னியோன்னிய சம்பந்தம் இல்லாதவர் போலவும் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வெளித் தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டால், அதுவே போதுமானது. அவர்கள் பேரில் யாரும் தோஷம் கூறமாட்டார்கள். ரகசியத்தில் அவர்கள் எவ்வித சம்பந்தம் வைத்துக் கொண்டாலும் கொள்ளலாம். அது அவர்களுடைய சாமர்த்தியத்தைப் பொறுத்தது. அவர்களுடைய சமூகத்தில் திருடுவதைவிடத் தெட்டுவதே முக்கியமானது. ஒருவர் உள்ளுக்குள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், வெளிப்பார்வைக்கு மாத்திரம் அவர்கள் சந்தேககரமாக நடந்து கொள்ளக் கூடாது. ஆனால் இது உலக வாழ்க்கையில், சுலபமாக நடக்கக்கூடிய காரியமா? ஒரு ஸ்திரீயும் புருஷனும் ஒன்றாய்ப் பழகுவது நெருப்பும் பஞ்சும் ஒன்றோடு ஒன்று பழகுவது போன்றதல்லவா! அவர்கள் ஒருவரிடத்தொருவர் கொள்ளும் காதலை மறைப்பதென்பது எளிய காரியமா? அது சூரியன் குஞ்சைக் கூரையில் வைத்து மறைத்த கதையாகவே அநேகமாய் முடிந்து போவதும், அதனால், கலியாண விடுதலை செய்வதற்காக