பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மாயா விநோதப் பரதேசி

புருஷனோ, பெண்ஜாதியோ நியாயஸ்தலங்களில் வழக்குத் தொடருவதும் ஏராளமாக நடைபெறுகின்றன. நம்முடைய நாட்டிலோ ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயைக் கலியாணம் செய்து கொண்டால், அந்தக் கலியாணத்தினால், அவர்களுடைய இரண்டு ஜீவன்களும் பூர்வஜென்மக் கருமத்தின் பலனாக ஒன்றுபட்டுக் கலந்து போவதாகவே நாம் மதிக்கிறோம். இருவரும் இறந்து போனாலன்றி, புருஷர் பெண்ஜாதி என்ற பாந்தவ்வியத்தை எவரும் விலக்க முடியாது. வெள்ளைக்காரர்களோ கலியாணச் சடங்கை சாதாரணமான ஓர் ஒப்பந்தத்தைப் போல பாவிக்கிறார்கள். இருவரில் எவருக்காவது இஷ்டம் இல்லா விட்டால், நியாய ஸ்தலத்தின் மூலமாக, விவாக பந்தத்தை விலக்கிக் கொள்ளலாம். ஸ்திரீகள் ஒருவர் பின் ஒருவராக எத்தனை புருஷர்களை வேண்டுமானாலும் கலியாணம் செய்து கொள்ளலாம். ஐம்பது, அறுபது வயதடைந்த கிழவிகள்கூட, இருபது வயதுள்ள ஒரு சிறுவனை ஐந்தாவது கணவனாகக் கட்டிக் கொள்வார்கள். அதை அவர்களுடைய சமூகத்தார் இழிவாகக் கருதுவதில்லை. அவர்களுக்குப் புருஷர் தேடுவதும், பெண்ஜாதிகள் தேடுவதும், கலியாண சம்பந்தத்தை ரத்து செய்து கொள்வதும், தண்ணிர் குடிப்பது போன்ற சர்வ சாதாரணமான காரியம். நம்முடைய கலியாண சம்பந்தமோ அப்படிப்பட்டதல்ல. புருஷனும் பெண் ஜாதியும் சேர்வது பூர்வசம்பந்தத்தால் ஏற்படும் காரியம் என்பதும், அது ஆயிசு பரியந்தம் விலக்கக் கூடாத பந்தம் என்பதும் நம்முடைய எண்ணம் ஆகையால், ஸ்திரீகள் தமது பதிகளைத் தெய்வமென மதித்துத் தமது வாழ்நாளைய சுகம் தமது கணவனுடைய சுகத்துக்கு வேறானதல்ல என்று நினைக்கிறது அன்றி, புருஷர் இறந்த பிறகு, தமது அழகைக் கெடுத்து, அலங்காரங்களைச் சீர்குலைத்து, மற்ற எவரும் தம்மை நாடாமல் செய்து, தமது கற்பைக் கடைசி வரையில் காப்பாற்றிக் கொள்ளுகின்றனர். இப்படிப்பட்ட மாறுபட்ட கொள்கைகளை உடைய நாம் நமது ஸ்திரீகளுக்கு இங்கிலீஷ் பாஷை கற்றுக் கொடுத்தால் அவர்கள் எப்படியும் உத்தியோகத்தை நாடுவார்கள். குடும்ப வாழ்க்கை பல வகையில் சீர்குலைந்து அழியத் தொடங்கும். அவர்களது கற்பிற்கும் பங்கம் நேரிடுவது திண்ணம்.