பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மாயா விநோதப் பரதேசி

ஒருவருக்கொருவர் வேற்றுமை அடைவதற்கு விதைபோடுவது போன்றது, இரண்டாவது, ஸ்திரி ஜாதிகளின் கற்பை அழிப்பதோடு, சமூகத்தில், கிரமப்படி மணந்து சதிபதியாக இருப்பது போய் ஒருவருக்கொருவர் இயற்கைக் காதலால் காந்தருவ விவாகம் செய்து சதிபதிகளாய் வாழ்வதாகிய மானக்கேட்டைப் பெருக்குவதற்கு, அஸ்திவாரம் போடுவது போன்றது. ஆகவே, நம் தேசத்து ஆண் மக்கள் வயிற்றுக்குப் பிழைப்பைக் கருதி இங்கிலீஷ் பாஷை கற்றுக் கொண்டாலும், அதை ஜீவனோபாயத்திற்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்வதோடு நின்று, நமது தாய்ப் பாஷையில் உள்ள தெய்விகமான அரிய நூல்களை எல்லாம் அறவே கற்று, நமது புராதன ஆசார ஒழுக்கங்களையும் மதக்கொள்கைகளையும் விடாமல் ஒழுகுவது அத்தியாவசியமானது. அதைவிடப் பன்மடங்கு சிரேஷ்டமானது நம்முடைய பெண் மக்களின் கல்வி. இங்கிலீஷ் பாஷையின் ஓசைகூட நமது பெண்டிரின் காதில் வீழ்வதே கூடாதென்ற பிடிவாதம் ஒவ்வொரு ஆண் மகனுக்கும் இருக்க வேண்டும். நமது சுயபாஷையில் உள்ள பரிசுத்தமான நூல்களை அவர்களுக்குப் பயிற்றுவதே எதேஷ்டமானது. பணத்தைவிட குணமே நமது பெண்மக்களுக்கு ஒப்பற்ற செல்வம். எல்லோரும் ஓடியாடிக் கோடி கோடியாகப் பொருள் தேடி நாம் அடையப் போகும் சுகத்தைவிட, கற்பு, பணிவு, அடக்கம், வாஞ்சை, உழைப்புக் குணம் முதலிய நிறைந்த மனைவியரோடு மனமொத்து வாழ்க்கை நடத்திக் கூழ் குடிப்பதே தேவேந்திர போகத்திற்கு சமமானதென்ற நமது முன்னோரின் கொள்கையை நாம் விட்டு, அன்னிய நாட்டாரின் வெளிப்பகட்டான பொய்த் தோற்றத்தைக் கண்டு மதிமயங்கி ஏமாறிப் போகாமல், நமது முன்னோர் ஏற்படுத்தியதே நமக்கு சர்வ சிலாக்கியமானது என்ற உறுதியில் தளராமல் நம்மவர் நடந்து கொள்ள வேண்டும். இங்கிலீஷ் பாஷை கற்கும் ஸ்திரீகள்தான் மேலானவர்கள் என்றும், அதைக் கற்காமல் நமது நூல்களை மாத்திரம் கற்பவர் மூடர்கள் என்றும் அன்னிய நாட்டார் கூறும் கொள்கைகளை நாம் வெறும் பிதற்றல் என்றே மதித்து, அடக்கம், பணிவு, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலிய குணங்கள்