பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மாயா விநோதப் பரதேசி

தோன்றுகிறது. இவளுடைய மனப்போக்கு இனி மறும் என்று நம்பவும் இடமில்லை. ஸ்திரீகளின் மனதில் இப்படிப்பட்ட விபரீதமான எண்ணங்கள் உண்டான பிறகு, அந்த மனம் அதே போக்கில் செல்லுமன்றி, அவைகளை விலக்கி மறுபடி அடக்கம், பணிவு முதலிய சிறந்த குண ஒழுக்கங்களை அவர்கள் வகித்து நடக்கச் செய்யும் என்று நாம் எதிர்பார்க்க நியாயமில்லை. இந்த விஷயங்களில் எல்லாம், வந்தபின் விலக்குவதைவிட வரும் முன் தடுப்பதே சுலப சாத்தியமான காரியம். மனைவிகளுக்குத் தமது புருஷரது விஷயத்தில் சிறிதளவு அலட்சியம் தோன்றிவிடும் பட்சத்தில், அது அவ்வளவோடு நிற்கிறதில்லை. அது விஷம் போலப் பெருகி, சிறியதில் இருந்து பெரியதாக வளர்ந்து கடைசியில் பெருத்த விபரீதத்தில் கொண்டு போய்விடும். அது போலவே, ஸ்திரிகள் புருஷரிடம் எதிர்த்து வாக்குவாதம் புரிந்து கொஞ்சம் கண்டுகொள்வார்களானால், அதன் பிறகு அந்தக் குணம் அமோகமாகப் பெருகிப் போகும். அதுபோலவே, அவர்கள் உழைத்து வேலை செய்வதை வெறுத்து, சோம்பேறி யாய் உட்கார்ந்திருந்து கொஞ்சம் பழகிவிடுவார்களானால், அந்தப் பேய் கொஞ்ச காலத்திற்குள் பெரும் பேயாக அவர்களைப் பிடித்துத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ளும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே நமது பெண்பாலாருக்கு உழைப்புக் குணம், குடும்ப அலுவல்களைக் கருத்தோடு கவனிப்பது, புருஷருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது, மாமனார் மாமியார் முதலிய புக்ககத்து உறவினரிடம் மரியாதையாகவும் ஒற்றுமையாகவும் ஒழுகுவது, தமது குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களது தேகத்தை ஆரோக்கிய மாக வைத்துக் காப்பாற்றுவது, தமது வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, தமது வருவாய்க்குத் தகுந்தபடி குடும்பச் செலவுகளைச் சிக்கனமாக நடத்துவது முதலிய சகலமான பொறுப்புகளும் தம்மைச் சேர்ந்தவைகள் என்று கருதும்படி நாம் அவர்களைப் பயிற்றுவது, மனித சமூகத்தின் ஷேம வாழ்க்கைக்கும், நாட்டின் நன்மைக்கும் இன்றியமையாத விஷயம். நமது தேசத்துப் பெண் பாலாருக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதிலும், இப்படிப்பட்ட நோக்கங்களே பெரும்பான்மையாக இருக்க வேண்டும். ஸ்திரிகளுக்கு இப்படிப்பட்ட