பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மாயா விநோதப் பரதேசி

மூடஸ்திரீகளைப் போல, சிற்றின்ப விஷயங்களிலாவது உல்லாசமாக நடந்து புருஷனது மனப் பிரேமையையும் காதலையும் கவர்ந்து கொள்ளக்கூடியவளா? அந்த விஷயத்திலும், இவள் சிறிதும் உபயோகம் அற்றவளாகத் தோன்றுகிறாள். ஆனால் இவள் பி.ஏ. வரையில் படித்திருப்பதால், இவளிடம் புத்திசாலித்தனத்தையும், இவள் படித்த புஸ்தகத்தில் உள்ள விஷயங்களையும் நான் எதிர்பார்க்கலாம். அதே புஸ்தகங்களை நானும் படித்திருப்பதால், அவை எனக்கு ருசிக்கப் போகிறதில்லை. ஆனால் இன்னொரு விஷயம். இவளுடைய பெரிய ஆஸ்தி ஒன்றை உத்தேசித்து வேண்டுமானால், இவளைக் கலியாணம் செய்து கொள்ளலாம். அதுவுமன்றி, இவள் ஒருவேளை ஏதாவது பெருத்த உத்தியோகம் வகித்தாலும் வகிக்கலாம். அந்த இரண்டு அம்சங்களையும் நான் ஒரு பொருட்டாக நினைப்பவன் அல்ல. ஆகவே, என் மனசைக் கவர்ந்து, என் ஆசையைப் பெருக்கத்தக்க அம்சம் ஒன்றுகூட இவளிடத்தில் காணப்படவில்லை. அப்படி இருக்க, பெரியவர்கள் நிச்சயித்து விட்டார்கள் என்ற காரணத்தினால் மாத்திரம் நான் இவளை மணந்து கொண்டு என் ஆயிசு காலம் முழுவதும் தீராத மனக் குறையை வைத்து உள்ளுக்குள்ளாகவே மனம் நொந்து பரம வேதனையான வாழ்க்கை நடத்துவதல்லவா என்னுடைய கதியாக முடியும் போலிருக்கிறது. இவளே தன்னுடைய தகப்பனாரிடம் சொல்லி இந்தக் கலியாணத்தை நிறுத்த சாத்தியம் இல்லை என்றும், நான் மன்னார்குடிக்கு எழுதி அதை நிறுத்த வேண்டும் என்றும் இவள் முடிவாகச் சொல்லிவிட்டாள். ஆனாலும், இதில் சில முக்கியமான இடையூறுகள் இருக்கின்றன. .பட்டாபிராம பிள்ளைக்கு மன்னார்குடியிலிருந்து என் தகப்பனார் அனுப்பிய தந்தியில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் இவர்களுடைய மனசை முற்றிலும் குழப்பி, இவள் செய்து கொண்ட தீர்மானத்தை மாற்றிவிடக் கூடியதாக இருக்கிறது. அந்தத் தந்தியில் 'என் சம்சாரத்துக்கு கோமளேசுவரன் பேட்டையிலாவது வேறு எந்த இடத்திலாவது தங்கை முதலிய உறலினர் இல்லை; சட்டைநாத பிள்ளை சிறையில் இருந்து வெளிப்பட்ட விவரம் பத்திரிகைகளின் மூலமாய். உங்களுக்குத்