பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மாயா விநோதப் பரதேசி

வேலைக்காரி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவுடனே வேறே யாரோ ஒருவர் அந்த விடுதிக்கு வெளியில் இருந்து கதவை மறுபடி மூடி அப்புறத்தில் தாளிட்டுக் கொண்டதும் தெரிந்தது. அவ்வாறு போஜன பதார்த்தங்களோடு உள்ளே வந்த வேலைக்காரி கட்டிலின் பக்கத்தில் காணப்பட்ட சலவைக்கல் மேடை ஒன்றை அடைந்து, தான் கொணர்ந்திருந்த வஸ்துக்களை அதன் மேல் வைத்துவிட்டு, அவ்விடத்தை விட்டுத் தண்ணிக் குழாய் இருந்த இடத்திற்குப் போய், ஒரு செம்பில் தண்ணி எடுத்துக் கொண்டு வந்து, அதையும் சலவைக்கல் மேடைமீது வைத்துவிட்டு நிரம்பவும் மரியாதையும் பணிவாகவும் கந்தசாமிக்கு எதிரில் நின்று, "அம்மா! உங்களுக்குப் பலகாரம் வந்திருக்கிறது. நீங்கள் பல் தேய்த்துக் கொண்டீர்களா? தேய்த்தாய்விட்டது என்றால், எழுந்து வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் எடுத்துப் பரிமாறுகிறேன்" என்றாள்.

அந்த வேலைக்காரி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த போது, கந்தசாமி அவளிடம் பல கேள்விகள் கேட்க வேண்டும் என்ற பதைப்பைக் கொண்டான். ஆனாலும், வேலைக்காரியே முதலில் தன்னோடு எப்படி பேசுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டு அதற்குப் பிறகு தான் கேள்விகள் கேட்க வேண்டும் என்று தீர்மானித்து, நிரம்பவும் பாடுபட்டுத் தனது ஆவலை அடக்கிக் கொண்டு மெளனமாக இருந்தான். வேலைக்காரி தன்னை "அம்மா" என்று அழைத்ததைக் கேட்டு, அவள் உண்மையான பணிவோடும் மரியாதையோடும் தன்னிடம் நடந்து கொள்வதைக் காணவே, அவற்றில் இருந்து அவன் பலவிதமான யூகங்கள் செய்யலானான். தான் உண்மையில் பெண்பிள்ளை என்றே அவர்கள் நினைத்துக் கொண்டு இருப்பதாகவும், தான் கந்தசாமி என்பதை அவர்கள் இன்னம் தெரிந்து கொள்ளவில்லை என்றும், அவன் ஒருவாறு நிர்ணயித்துக் கொண்டான்; அதுவுமன்றி, அவர்கள் தன்னை அப்படிப்பட்ட சிரேஷ்டமான விடுதியில் வைத்திருப்பதைக் கொண்டும், அந்த வேலைக்காரியிடம் பிரியத்தோடு பலவகைப்பட்ட ஆகாரங்கள் அனுப்பி இருப்பதில் இருந்தும், அவள்