பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மாயாவிநோதப் பரதேசி

மாட்டாள் என்ற எண்ணம் உறுதியாக ஏற்பட்டது. ஆகையால், அவனது மனம் மாறி மாறித் துன்பமும் இன்பமும், ஏக்கமும், ஆறுதலும் கொண்டு தாமரை இலைத் தண்ணீர் போலக் தவிக்கலாயிற்று.

தான் மறுபடியும் வேலைக்காரியோடு சம்பாஷித்து மற்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவனாய்க் கந்தசாமி தான் மனோன்மணியல்ல என்பதையாவது தான் ஆண்பிள்ளை என்பதையாவது அவளிடம் வெளியிடுவது உசிதமல்ல எனத் தீர்மானித்துக் கொண்டு வேலைக்காரியைப் பார்த்து, "ஏனம்மா! இப்போது நாம் இருக்கும் இந்த மாளிகை பட்டணத்திலேயே இருப்பதா, அல்லது, பக்கத்தில் உள்ள ஏதாவது ஊரில் இருப்பதா? இந்தத் தெருவின் , பெயர் என்ன? என்னைக் கொண்டு வந்துள்ள உங்கள் எஜமானருடைய பெயர் என்ன? அவருக்கு ஏதாவது உத்தியோகம் உண்டா ? எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொல்" என்றான்.

அதைக் கேட்ட வேலைக்காரி, "அம்மா! என்னுடைய எஜமானர் பெரிய மிராசுதார்; அவருக்கு ஏராளமான பூஸ்திதியிருக்கிறது. அதோடு ரொக்கமாகவும், வீடுகளாகவும், நகைகளாகவும் அநேக லட்சம் ரூபாய் பெறுமான சொத்து இருக்கிறது. அவருக்கு உத்தி யோகமாவது வேறே தொழிலாவது செய்து பொருள் தேட வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீங்கள் அவரைக் கட்டிக் கொண்டால், எல்லா சம்பத்தும் உங்கள் இருவருக்குமே ஆகும். நீங்கள் நல்ல உயர்வான பதவியில் இருந்து எப்போதும் ஆனந்த மாகக் காலங்கழிக்கலாம். அந்த ஒரு சங்கதியைத்தான் நான் இப்போது சொல்ல முடியும். இவருடைய பெயர் இன்ன தென்பதையாவது, இந்த மாளிகை இன்ன இடத்தில் இருக்கிற தென்ற விவரத்தையாவது நீங்கள் கேட்டால், அதை நான் சொல்லக் கூடாதென்று அவர் கண்டித்து உத்தரவு செய்திருக்கிறார். நான் அதை மீறி நடக்க முடியாது. அதைப்பற்றி நீங்கள் என்மேல் வருத்தப்படக் கூடாது. நான் வேலைக்காரிதானே; நான் அவருடைய உத்தரவை மீறி நடந்தால் என்னுடைய பிழைப்பின் வாயில் மண் வீழ்ந்து விடும்.