பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

79

மகிழ்ச்சி அடைந்தவளாய், "சரி; உங்களுக்கு எஜமானருடைய புகைப்படம் தானே வேண்டும். அது கீழே இருக்கிறது. நான் போய்க் கொண்டுவந்து கொடுக்கிறேன். நேரமாகிறது. நீங்கள் முதலில் எழுந்து ஆகாரத்தை முடித்துக் கொள்ளுங்கள். நான் பரிமாறிவிட்டுப் போகிறேன்" என்றாள்.

கந்தசாமி, "எனக்கு அவ்வளவாக பசி உண்டாகவில்லை. ஆனாலும் உங்களுடைய திருப்திக்காக, நான் ஏதாவது கொஞ்சம் சாப்பிடுகிறேன். எனக்கு நீ இருந்து பரிமாற வேண்டும் என்பதில்லை. நானும் உன்னைப் போலப் பெண்பிள்ளை அல்லவா. நானே பரிமாறிக் கொண்டு சாப்பிடுகிறேன். நீ போய் முதலில் படத்தை எடுத்துக் கொண்டுவா. அதைப் பார்க்க, எனக்கு நிரம்பவும் ஆசையாக இருக்கிறது" என்றான்.

வேலைக்காரி அதற்கு இணங்கி அவ்விடத்தை விட்டுக் கதவண்டை போய், அதை மெதுவாகத் தட்ட, அதன் பின்புறத்தில் ஆயத்தமாக நின்ற மனிதன் அதைத் திறந்துவிட, அவள் அப்பால் சென்று மறுபடியும் மூடி வெளியில் தாளிட்டுக் கொண்டு போய்விட்டாள்.

கந்தசாமி உடனே கட்டிலைவிட்டுக் கீழே இறங்கி சலவைக்கல் மேடையண்டை சென்று! அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தின் மேல் மூடப்பட்டிருந்த துணியை விலக்கினான், தாம்பாளத்தில் மாதுரியமான பலவகைப்பட்ட பக்ஷன பலகாரங்கள் காணப்பட்டன. அந்த மாளிகையை விட்டுத் தான் வெளிப்பட எத்தனை நாட்கள் செல்லுமோ என்றும், அதுவரையில் தான் பட்டினி கிடக்க முடியாதென்றும் அவன் நினைத்ததன்றி, அந்த வேலைக்காரியின் தோற்றம் சொற்கள் முதலியவற்றில் இருந்து அவள் உயர்ந்த ஜாதி ஸ்திரீதான் என்பதையும் நிச்சயித்துக் கொண்டான். ஆகையால், அவன் அங்கே வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிகளுள் சிலவற்றையும், சிறிதளவு பாலையும் உட்கொண்டு, அவ்விடத்தை விட்டுத் திரும்பி வந்து மறுபடி கட்டிலின் மீது உட்கார்ந்து சாய்ந்து கொண்டான். அவனது உடம்பு மாத்திரம் அவ்விடத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருந்ததேயன்றி, அவனது மனம் முழுதும்