பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

83

கட்டுக்கதை. மனோன்மணியம்மாளை நான் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்ற சங்கதி இவனுக்கு எப்படியும் தெரிந்திருக்கலாம். இதற்கு முன் மன்னார்குடியில் பட்டாபிராம பிள்ளை இருந்த காலத்தில், தமது பெண்ணை மாசிலாமணிக்குக் கொடுப்பதாகச் சொல்லித்தானே சட்டைநாத பிள்ளையை நம்ப வைத்து அவனுடைய ரகசியங்களை எல்லாம் கிரகித்து அவனைச் சிறைச் சாலைக்கு அனுப்பினார். அந்த ஆத்திரத்தையும் எங்கள் மேல் உள்ள ஆத்திரத்தையும் தீர்த்துக் கொள்வதற்காகவே, இவன் மனோன்மணியம்மாளை அபகரித்து வந்து ரகசியத்தில் கலியாணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கிறான் போலிருக் கிறது! இவனுடைய எண்ணத்தில் கடவுள் முன்னே மண்ணைப் போட்டது போல இப்போதும் போட்டுவிட்டதன்றி, மனோன் மணியம்மாளுக்குப் பிரதிநிதியாக என்னை அனுப்பி வைத்திருக் கிறார் போலிருக்கிறது! துரோபதைக்குப் பதிலாக பீமசேனன் பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் மறைந்திருந்து கீசகனை வதம் செய்யவில்லையா? அதுபோல இவன் விஷயத்திலும் நடக்கும்படி கடவுள் சூழ்ச்சி செய்திருக்கிறார். இதைப் பார்த்தால், கடவுள் எனக்கும் மனோன்மணியம் மாளுக்கும் தான் முடிச்சுப் போட்டு வைத்துவிடுவாரோ என்ற சந்தேகங்கூட என் மனதில் உண்டாகிறது. இருக்கட்டும். நம்முடைய புத்தியையும் முயற்சியையும் மீறி ஒரு காரியம் நடக்குமானால், அது கடவுளின் அருளேயன்றி வேறல்ல. அதை நாம் தடுக்க முடியவே முடியாது. இருக்கட்டும், நாளைய தினம் கலியாணம் நடக்கப் போவதாக இவள் சொன்னதைக் கேட்டவுடன், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று. இந்த வீட்டின் எஜமானரை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லி இங்கே வரச் செய்து, நான் என்னுடைய பெண் வேஷத்தைக் கலைத்து விட்டு என் இயற்கை வடிவத்தோடு இருந்து, நான் இம்மாதிரி வேஷத் தோடு வந்திருந்ததற்கு ஏதாவது ஒரு சமாதானம் சொன்னால், இவன் என்னை இவ்விடத்தை விட்டு அனுப்பி விடுவான் என்று சற்று முன் நினைத்தேன். இனி அந்த எண்ணப்படி நான் செய்வது நிரம்பவும் அபாயகரமாகத் தோன்றுகிறது. நான் உண்மையில் கந்தசாமி என்பதை இவன்