பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மாயா விநோதப் பரதேசி

அப்படி இருக்க, இவள் யார் என்ற எந்த விவரத்தையும் கேட்காமல், இவளை நான் கலியாணம் செய்து கொண்ட பிறகாவது, இவளுக்குச் சந்தேகம் உண்டாகி இருக்காதா? இவளை நாம் வேறே யாரோ ஒரு பெண் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று. அப்போதாவது இவள் யூகித்துக் கொண்டிருப்பாள் அல்லவா?

இ. சேர்வைகாரன்:- ஆம். வாஸ்தவம் தான்.

மாசிலாமணி:- இவள் யாராக இருப்பாள்? என் மேல் இவள் உண்மையான ஆசை கொண்டு என்னைக் கலியாணம் செய்து கொள்ள இசைந்திருப்பாள் என்று நினைப்பதற்கில்லை. நான் பெரிய பணக்காரன் என்பதைத் தெரிந்து கொண்ட உடனே, இவ்வளவு அபாரமான சொத்திற்கும் தான் எஜமானி ஆசிவிடலாம் என்ற கருத்தைக் கொண்டே, இவள் நம்மை இப்படி மாற்றி இருக்கிறாள். இவள் யாருடைய மகளோ? என்ன ஜாதியைச் சேர்ந்தவளோ? ஒருவேளை இவள் தாசி அல்லது வேசை வகுப்பைச் சேர்ந்தவளோ. என்ன இழவோ தெரியவில்லையே! நீர் போய்ப் பட்டணத்திலிருந்து இவளைக் கொண்டு வந்து என் கழுத்தில் கட்டி விட்டீரே!

இ. சேர்வைகாரன்:- (வேடிக்கையாகப் புன்னகை செய்தவனாய்) இப்போது நமக்கு என்ன மோசம் முழுகிப் போய்விட்டது. இவள் உங்களைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோசக் கருத்தாக எண்ணினால், அது பலித்துப் போய் விட்டதா என்ன? நாம் செய்தது நாடகக் கலியாணம் தானே! உண்மையான புரோகிதர் வந்து மந்திரம் சொல்லி பந்துக்களுக்கெதிரில் தாலி கட்டினது கெட்டுப் போகிறதா என்ன? இது பொம்மைக் கலியாணம் என்பதையும், நாம் இவளை ஏமாற்றுகிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளாமல் இவளே நம்முடைய வலையில் வந்து சிக்கிக் கொண்டாள். இதனால் நமக்கு என்ன பிரமாதமான விபரீதம் நேர்ந்து விட்டது? ஒன்றும் இல்லை. பெண் நல்ல உயர்ந்த ஜாதி மல்கோவா மாம்பழம் போல பார்ப்பதற்கு மகா சொகுசாக இருக்கிறாள். இவளோடு நீங்கள்