கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்
51
இராவணனுக்கு 10 தலைகள். கம்பன் காவிய உலகில் அனைத்தும் பெரிதாகக் காட்ட வேண்டுமென்பதற்காகத் தனது படிமங்களை மிகை நவிற்சியாகவே படைத்துள்ளான். நல்லதங்காளுக்குச் சீதனம் கொடுத்தது ஒரு பட்டி மாடுகள், மனை பொன், தயிர் கடையும் பாத்திரம் பொன், கடை கயிறும் பொன் என்று யாவும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. அவள் ஒரு விவசாயியின் பெண்தான். அவள் ஊரில் இருந்து அண்ணன் ஊருக்கு நடந்துதான் வருகிறாள். அவளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியின் கொடுமையைக் காட்ட அவளுடைய செல்வச் சிறப்பு இவ்வளவு மிகை நவிற்சியாகக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் ரியலிசப் படைப்பில் மிகை நவிற்சி அளவாகவே பயன்படுத்தப்படும். ஏதாவது ஓர் உணர்ச்சியையோ, பாத்திரத்தின் தன்மையையோ, அழுத்தமாகப் பதியவைக்க இந்த உத்தி பயன்படுத்தப்படும்.
அறிவியல் விளக்கங்களில் மிகை நவிற்சி பெரிதும் கேடு விளைவிக்கும். ஓர் உலோகத்தின் இளநிலை 400°c என்பதை 4000°c என்றால் அது பொய்யாகிவிடும். அது விஞ்ஞான உண்மையாக இராது. ஒரு ஹைட்ரஜன் அணுவில் ஒரு புரோட்டானும் ஓர் எலெக்ட்ரானும் உள்ளன என்பதைக் கவிதை பாக்க 100 புரோட்டானும் 100 எலெக்ட்ரானும் ஹைட்ரஜனில் உள்ளன என்று சொல்லலாமா?
உருவகம்: கவிதையில் தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்க உவமையும் உருவகமும் பயன்படுகின்றன. தமிழில் பண்டைய இலக்கியங்களில் காணப்படும் உவமைகள், உருவகங்கள் குறித்துச் சில (Phd) ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இந்த உருவகங்கள் கலை உத்திகள் என்ற முறையில் ஓர் அழகியல் விளைவை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும் பான்மையான உவமைகள் நாட்டுப்புற மக்களின் பேச்சு வழக்கில் இருந்து எடுத்தாளப்படுகின்றன. பத்தாயிரக் கணக்கான பழமொழிகள் நாட்டுப்புற மக்களின் அனுபவ அறிவின் திட்டபமான வெளியீடுகளாக வழங்கி வருகின்றன. கவிஞர்களும் இலக்கியப் படைப்பாளிகளும் பாமரர் வழக்குகளை அறிந்திருந்தால் உவமைகளையும் உருவகங்களையும் தமக்குத் தேவையான இடத்தில் எடுத்தாளவும் புதியன புனையவும் எளிதாயிருக்கும்.
சிங்கம் மிருகேந்திரன்
கண்கள் ஆன்மாவின் சாளரங்கள்
இத்தகைய உருவகங்களால் அறிவியலுக்கு என்ன பயன்? எனவே உருவகங்கள் அறிவியலில் பயன்படா.