உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபும் மாற்றமும்

71

வாழ்க்கையியக்கத்தை, தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களாக வருணித்தார்கள். தெய்வங்கள் என்ற மனித சக்திக்கு மீறிய இயற்கைக் கூறுகளை எதிர்த்துப் போராடுகிற மனிதனைக் குறியீட்டு முறையில் கலைப் படிமம் ஆக்கினார்கள்.

நமது தத்துவ முதல்வர்களான மார்க்சும் எங்கல்சும் அடிமைச் சமுதாயம் முதல், முதலாளித்துவச் சமுதாயம் வரை மனித குலத்திற்கு அழகுச் செல்வங்களைத் தந்த இலக்கியப் படைப்பாளிகளைப் போற்றிப் பேசியுள்ளார்கள். கவிஞர்களுடைய தத்துவ வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிற அதே சமயம் அவர்கள் காலத்தில் முற்போக்கான தத்துவம் தோன்றுவதற்கு முன்தேவையான புதிய வர்க்கம் சமுதாய அரங்கில் தோன்றவில்லை என்பதையும் மனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர்கள் நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பைரனையும் ஷெல்லியையும் ஒப்பிட்டு எழுதும்போது மார்க்ஸ் எழுதினார்:

பைரன் தம் காலத்து நிலப் பிரபுத்துவப் பண்பாட்டுக் கூறுகளை வன்மையாக எதிர்த்தார். ஆனால் அவர் கற்பனாவாதியாக இருந்ததால் அவர் கவிதைகளில் பிற்போக்குத் தன்மை வளர்ச்சியடையுமுன் இறந்து போய்விட்டார். ஷெல்லி முற்றும் புரட்சிவாதியாகவும் புரட்சிக் கற்பனாவாதியாகவும் இருந்ததால் முதல் சோஷலிஸ்டுக் கவிஞனாக உருவாகியிருக்கக்கூடும். அவருடைய முழுமையான முற்போக்கு உருவம் வெளிப்படும் முன்னால் அவர் இறந்து போய்விட்டார்.

ஷெல்லியின் விடுதலை ஆர்வம், அடிமைப்பட்ட மக்களோடு கொண்டிருந்த சார்பு உறவு, விவசாயிகளது போராட்டங்களுக்கு அளித்த ஆதரவு ஆகிய இவையனைத்தையும் கற்பனைக் குறியீட்டு முறையிலும் நேரடியான அறைகூவல்கள் மூலமும் வெளியிட்ட காரணத்தினால்தான் தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞர் பாரதி அவரைப் போற்றினார்,

இவை அனைத்தையும் ஜீவா அறிந்து உலக இலக்கிய மரபின் முற்போக்கான கூறுகளைக் கிரகித்துக் கொண்டார். ஒவ்வொரு காப்பியத்திலும், வரலாற்றுக் காலம், சமூக அமைப்பின் வர்க்க அமைப்புகள், அவற்றுள் செயல்படும் வர்க்கங்கள், அவ்வர்க்கங்களின் பிரதிநிதிகளையும் அவர்களின் தன்மைகளையும் பிரதிபலிக்கிற கலைப் படிமங்கள் ஆகியவற்றையெல்லாம் அவர் நுணுகி ஆராய்ந்திருந்தார். தாம் சோஷலிச ரியலிசத்-