வெற்றி பெற்று சுரண்டும் வர்க்கங்களைத் தோல்வி படையச் செய்தவுடன் தோற்றுப்போன வர்க்கங் களே தங்கள் எதிர்ப்பைக் கைவிட்டு விடமாட்ட தோல்வியின் காரணமாகத் தாங்கள் இழந்துவிட்ட உடைமைகளை மீட்டுக் கொள்வதற்காக அவர்கள் பாட்டாளி வர்க்க அரசை எதிர்த்துப் போராடு வார்கள். அப்பொழுது இவ்வரசு அவ்வெதிர்ப்பை அடக்கி முறியடிப்பதற்கு அ. சின் அதிகாரத்தைப் பயன்படுத்தும். இவ்வரசு அரசியல் உள்ளடக்கத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும். இதன் முக்கிய கடமை சுரண்டல் வர்க்கங்களை வர்க்கங்கள் என்ற நிலையில் அழிப்பதுதான். அதன் மற்ருெரு மு க்கியமான் கடமை, பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை உழைக்கும் மக்கள் அனைவருடைய ஆதரவையும் பெற்று சுரண்டலமைப்பை ஒழித்து புதிய சோஷலிச சமுதாயத்தை அமைப்பதாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முற்போக்கு வர்க்கங்களின் வர்க்கப் போராட்டத்தின் சாதனமாயினும், அதன் அடிப்படை நோக்கம் வர்க்கப் போராட்டம் மட்டு மல்ல. பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்குரிய சாதனமாகவும் இவ்வரசு பயன்படுத்தப்பட வேண்டும். இது பற்றி லெனின் கூறுவதாவது: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மிக முக்கியமாக சமூகப் பொருள் தார அரசியல், தத்துவார்த்த அம்சங்களில் சமூக வாழ்க்கையை சோஷலிஸ்ப் பாதையில் மாற்றி யமைக்கும் சாதனமாகும்.' இக்கடமைகளே நிறைவேற்ற பா ட் டா வி. வர்க்கத்திற்கு, உழைக்கும் வர்க்கங்கள் அனைத்தின் ஆதரவு தேவையாகும். இத்தகைய கூட்டாளி அமைவதைப் பொறுத்தே . வர்க்கத்தின் வெற்றி நிலைத்திருக்கும். முக் fj |
பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/118
தோற்றம்