பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மார்ட்டின் லூதரின்

அந்த பார்க்கத்தைப் போதிக்கும் சபைக்குத் திருச்சயை என்றும், அதன் வழிகாட்டி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும், அதை உருவாக்கியவரும் அவரே என்றும்; அதை நடத்துகிறவரும், உயிரோட்டமும் அதன் ஆரம்பமும் முடிவும் இயேசு கிறிஸ்துவே என்றும்; முழு நம்பிக்கையோடு இன்றும் மக்கள் பின்பற்றி, வழிபட்டும் வருகிறார்கள்.

மனித ஆத்துமாக்களை இயேசு கிறிஸ்துவிடம் சேர்ப்பவன் அல்லது வழி நடத்துபவன்தான் கிறித்துவன். அந்தத் தொண்டுதான் கிறிஸ்துவ அடியார்களின் திருத் தொண்டாகும் என்பதற்காக கிறிஸ்துவர்கள் உலகிலே அருந்தோண்டாற்றி வருவதைப் பார்க்கிறோம்.

'பெண்களிடத்தில் பிறந்தவர்களில் பெரியவன்' என்று இயேசு மகனால் பாராட்டப்பட்ட பரிசுத்த யோவான் ஞானகுரு செய்த திருத்தொண்டும் இதே மார்க்கத் தொண்டுதான். அந்த ஞானி மக்களைக் கிறிஸ்துவிடம் வழி நடத்தினார், தனது சீடர்களை இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு பணித்தார்.

ஏகவின் ஞானோபதேசங்கள் உலகிலே பெருக வேண்டும்; தான் சிறுக வேண்டும் என்றார். பரலோகத்தில் இருந்து வந்த இறைவன் இயேசு பெருமான். அவர் மனிதர் அனைவரையும் விட மேலானவர்.

"பிதாவானவர் குமாரனில் அன்பாய் இருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார். குமாரனிடத்திலே விசுவாசமாய் இருக்கிறான். சித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான் குமாரனை விசுவாசியாதவன் ஜீவனைப் பார்ப்பதில்லை; தேவனுடைய கோபம் அவன்மேல் நிலதிற்கும் என்று போதித்தவர் யோவான் என்ற ஞான குரு.