பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 37

இந்த விகாலைக்குக் காரணம், அலெக்சின் உறவினர் கனே என்று கேள்விப்பட்டார்! ஆனால், தனது கருத்து ஒரு சிலருக்கு விரோதமாக இருக்கின்றதே, நாம் எந்த உண்மையை உரைத்தாலும் தம்மைச் சார்ந்தவர்களே நம்பை எதிர்க்கிறார்களே; கருடன் பகை தோல் வேருடன் அல்லவா கெடுதிகள் வந்து நம்மை அழிக்கும் என்ற அச்சம் லூதருக்கும் ஏற்பட்டது! அதனால் அலெக்ஸ் மரணம் மார்ட்டினையும் கண்கலங்க வைத்துவிட்டது, *

அப்படி ஒரு மரணம் தனக்கு ஏற்பட்டுவிட்டால், நியாயத் தீர்ப்பு என்ன தரக தண்டனையைத் தருமோ என்ற இறுதித் தீர்ப்பு அவரை அலைகழித்துக் கோன்ே இருந்தது. இதற்குரிய வழி என்ன என்றே சிந்தித்துக் கொண்டிருந்தார். -

ஒருவேளை இதை இயல் கற்று, சாமியாராகி, இறைத் தோண்டும் திருச்சபை திருத்தொண்டும் தொடர்ந்து செய்து, பொதுமக்களை மாரிக்க வழிக்குத் திருப்பி, இயேசு பெருமான் ராஜ்ஜிகம் பரவ ஞானத் தொன்.ாற்றி னால் நி:ாயத் தீர்ப்பு நரக தண்டனையிலே இருந்து தப்பி விடலாமோ என்ற முடிவிலே மார்ட்டின் உழன்று கொண் டிருந்தார்.

இந்த நேரத்தில் அவர் ஒரு கல்வி மேதை என்று எல் லோரும் பாராட்டக்கூடிய வகையில் எம்.ஏ. பட்டம் பெற் றார், அதற்கடுத்து தத்துவமேதை என்பதற்கு ஆடை யாளமாக தத்துவப் பண்டிதர் பட்டிமும் Doctor of Philosophy பெற்றார். தனது தந்தையின் பேராசையான சட்டத்துறையைக் கற்று அதிலும் பட்டம் பெற்ற வித்தக ரானார்,

எபேர்ட் பல்கலைக்கழகம் எப்படி ஈடும் எடுப்பு மற்ற கல்விக் கேட்டமாக அந்நாளில் புகழ்பெற்றிருந்ததோ,