பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔚 மார்ட்டின் லூதரின்

ஆனால், மார்ட்டின் லூதர் தனது முடிவிலே இருந்து மாறவில்லை: பிரிவு.பச்சார மண்டப விருந்து மூடித்த பிறகு, தனது தன்பர்களையும், பல்கலைக் கழகப் பேரா சிரியர்களையும், ஊழியர்களையும் விட்டுப் பிரிந்து, அன்றிரவே அகுஸ்தினரின் சந்தியாச மடத்திற்குச் சென்று, தன்னையும் அதே மடத்தில் சாமியாராகச் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டினார்!

இருபத்திரண்டே வயதுடைய இளம் வானியரான ஒருவர்; கல்விக் களஞ்சியம் என்ற நற்பெயரைப் பெற்ற ஒரு வாலிபர்; சாமியாராகிறேன் என்று மடத்தின் கதவைத் தட்டிக் கேட்கும் போது, வேண்டாம் என்று கூறுபவர் gifyf?? -

8. வீதி வீதியாக ஒடு ஏந்திப் பிச்சை: தவம்: ஜெயல்:

சாமியாரானார் மார்ட்டின் லூதர் என்ற செய்து யைக் கேள்விப்பட்ட அவரது பெற்றோர் வேதனைப்பட்டார்கள்: மனக் கலக்கமடைந்தார்கள்! தனது சிகன் வழக்கறிஞர் ஆவானே என்றல்லவா. கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தோம்: சாமியாராகி திருவோடு ஏந்த ஆரம்பித்து விட்டனே என்ற துயர நேருப்பிலே சிக்கினார்கள்:

மார்ட்டின் நண்பர்கள் நல்ல ஒர் இசைக் கலைஞன் துறவியாகி விட்டானே என்று மனம் நைந்தார்கள்: பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் எதிர்கால தத்துவ ஞானியை நாடு இழந்து விட்டதே என்று வருத்தப்பட்டார் கள்! பல்கலை நிர்வாகத்தினர், நமது கலா சாலையின் நிகரற்ற முதல்தரக் கல்வி மாணவன் கதி, இவ்வாறு சாமி யாராவதற்காகவா பயன்படவேண்டும் என்று சஞ்சலப் துட்டார்கள்!