பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 蠱

தீவிரமான அன்பை மார்ட்டின் லூதர் மீது வைத் திருந்த சில மாணவ நண்பர்கள், அவரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையே என்று மனத்துயரடைந்து: "நாங்கள் சென்று மாரீட்டினை மடக்தை விட்டுப் பரபர வென்று இழுத்து வருகின்றோம் பார் என்று சவால் விட்டு விட்டுப் பல்கலைக் கழகத்தை விட்டுப் புறப்பட்டார்கள்!

சென்ற அந்த மாணவர்க்குழு, மடத்தைச் சுற்றிச் கற்றி வலம் வந்ததே தவிர, மாரீட்டினைப் பார்க்க முடியா தவர்கசாக சோகமுற்றுத் திரும்பினார்கள். அவரைக் கண்டு கூட பேச முடியவில்லையே என்று கவலையுற் நார்கள். - . . . . எப்படியும் மார்ட்டின் லூதரை மடத்தை விட்டு இழுத்துச் செல்லும் முயற்சிகள் நடக்கும் என்று முன் கூட்டியே யூகித்துக் கொண்ட மடத்தினர், தங்களது மடத் தின் நுழை வாசல்கள் கதவுகளை எல்லாம் நன்றாக இழுத்து மூடித் தாழிட்டுக் கொண்டு, மிகவும் பலமாகக் காவல் இருந்தார்கள்.

ஆந்த மடம் இத்தகையப் பலத்த காவலோடு ஒரு மாதக்காலம் மூடப்பட்டிருந்தது! அதனைப் பார்க்க எவரும் அனுமதிக்கப்படவில்லை. பிறகு ஒரு மாதம் கழித்த அந்த பல்கலைக் குழு மாணவர்கன் மீண்டும் வத்து மார்ட்டினைப் பார்த்தார்கள். மடத்தை விட்டுத் தங்களுடன் திரும்புமாறு கெஞ்சினார்கள்: வேண்டினார் கள்: அதற்கும் மார்ட்டின் லூத மனம் ஆசையவில்லை: அதனால் அவர்கள் கழையப்டி வந்த வழியே திரும்பி சோக மயமாய் வத்து சேர்ந்தார்கள்.

சாமியார் ஆனதற்குப் பிறகு மார்ட்டின் லூகர் என்ற அவரது பெயரை அகுஸ்தீன் என்று அவர்மாற்றி அமை துக் செர்ண்டார். பெயர் மாறிற்றே தவிர, லூதர் புத மனிதராக மாறினாரா என்றால், அதுதான்்.இல்லை,