பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மார்ட்டின் லூதரின்

பழைய கபால மாவது லூதருக்கு மாறிற்றா? இல்லை! அவர் எண்ணியவாது சாமியார் ஆனவுடன் மன அமைதி பெற முடியும் என்று எண்ணியபடி அமைதியாவது அவரது மனதுக்குக் கிடைத்ததா? அதுவும் இல்லை!

கல்லூரி, கலாசாலையில் எப்போதும் புத்தகப் புழுவா கவே தெளித்து கொண்டிருப்பாரே, இப்படியாவது நூலறிவு பெறும் வசதியாவது அருக்கு வாய்ந்ததா? இல்லவே இல்லை!

கற்றக் கல்வியோடு படித்த நூலறிவை ஒப்புவமைப் படுத்தி வேறுபாடுகள், மூரண்பாடுகள், ஒற்துமைகள், காலமாற்றக் கருத்துக்கள் எல்லாம் ஆராய்ச்சி செய்து சித் தித்துப் பார்ப்பாரே, அந்த சிந்தனையானது உண்டா? இல்லை; இல்லை; இல்லை; பாவம்'

பாவப் பாரம்தான்் அவர் மனதை இப்போதும் அழுத் திக் காண்டிருந்ததேயன்றி, அமைதி ககம் அவரது மனத் துக்குக் கிட்டவில்லை என்பதுதான்் உன்மை, அதற்கு மாறாக, அவர் மடத்து வேலைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அது சாமியாருக்கு அழகுமல்ல!

மடத்துவேலைகள் என்ன தெரியுமா? மடம் முழுவதை யும் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்; மடக் கதவுகளை காலையில் திறந்து மாலையில் மூடி தாழிட வேண்டும்: யார், என்ன வேலைகளைச் செய்யுமாறு கட்டளையிட் பாலும் அவற்றைச் செய்ய வேண்டும்; யார் பார் மடத்து அதிகாரிகளோ அவர்களை எல்லாம் வணங்கிப் பணியாற்ற வேண்டும்; மடத்து வேலைகளை எல்லாம் மேற்கண்டபடி செய்து முடித்த பின்பு என்னவேலை தெரியுமா?

மார்ட்டின் லூதர் திருவோடு ஏந்த வேண்டும்; அதா

வது பிச்சைப் பாத்திரத்தை இரு கைகளிலும் ரந்த வேண் இம்; தெருத்தெகுவாக அலைந்து ஆலைந்து பிச்சைச் சோறு