பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 3 ) .

குரு அவசரம் அவசரமாக ஏழுமுறைச் செய்து முடித்து விட்டு, லுத்தரின் காதருகே வந்து சீக்கிரம், சீக்கிரம்' பூசையை முடித்துவிடு வருமானம் பணம் முக்கியம் என்று கடுக்டுப்புடன் கூறியதைக் கேட்டு கடுங்கோபம் கொண் i-rriff

ரோமாபுரி தூய யோவான் திருக்கோயிலில் சனிக் கிழமை தோறும், எந்தத் தாயாருடைய மகன் மீசா என் னும் பூசை செய்கிறாரோ, அந்தத் தாயார் பெரும் பேறு பெறுபவளாவாள் என்ற ஒரு நம்பிக்கை அங்கே நிலவி இருந்தது.

அப்போது லூதரது பெற்றோர் உயிரோடு இருந்த தால், அவர்களைத் தமது ரோமைத் கிருபூசையாலும், புனிதப் படிக்கட்டு ஜெபத்தாலும் உத்தரிக்கும் தலத்திலே, இருந்து இப்படி நடைபெறுவதைப் பார்க்கும் போது நமது பெற்றோரிகள் மரணமடைந்திருக்கக் கூடாதா? என்று வருத்தமும் பட்டார்.

ரோமாபுரியிலே அவர் தங்கிய ஒரு மாத காலத்தில் ஆங்கே இப்படியெல்லாம் தடப்பதை நேரிலேயே பார்த் தார். இதுதான்் ரோமாபுரி என்ற புண்ணியத் திருத்தலத் தின் லட்சணமா என்று திகைத்தாரி.

வழக்கம் போல வேதாகமச் சொற்பொழிவுகளை வீட்டன்பர்க் தேவாலயத்தில் நடத்தி வந்தார்! அதனால் அவரது பெயரும் புகழும் கற்றுப்புறமுள்ள நகர்களிலும், மக்களிடையேயும் பேருகியது.

விட்டன்பர்க் இளவரசனும், அந்த நகரிலுள்ள விட்டன் பரீக் பல்கலைக்கழக நியமன அதிகாரம வகித்த தலைவரு மான பிரட்சிக் என்பவருக்கும் லூதரின் வேதாகமச் சொற் பொழிவாற்றலையும், அவரிடையே காணப்பட்ட கல்விச் சிறப்பின் மேற்கோள்களும், வாக்கு வன்மையும் அழகழ கான சொற்பிரயோகங்களின் ஆழமும், தத்துவக் கலை யின் நுட்பங்களும், உண்மையான ஓர் இறையியலின் ஆன்