பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மார்டின் லூதர்


மாயிருந்தது. ஜர்மனி என்றால் அகில உலக வல்லரசுகளின் மணிமுடிபோன்றது என்று அப்போது யூகித்தறியக்கூட முடியாத காலம். ஒரு ஹிட்லர் பிறப்பான், வான் ஹிண்டன்பர்க் ஆட்சி யைத்தட்டிப் பறிப்பான், யூதர்களின் கொட்டத்தை அடக்குவான், உலக மக்களின் உயிரைக் குடிப்பான், சூரியனே அஸ்தமிக்காத ஆங்கிலேய ஆட்சியை ஆட்டிப்படைப்பான் என்றெல்லாம் யாருக்குத்தெரியும். அன்றாடம் ஆண்டவனிடம் பேசும் போப்புக்கே தெரியாது. பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்? அதே ஜர்மனியில் ஒரு சிறு கிராமமாகிய துரிங்கியர் என்ற ஊரில் ஒரு ஏழை விவசாயிக்குப் பிறந்தவன்தான் நமது பிரஸ்தாபத்துக்குரிய கதாநாயகன் மார்டின் லூதர்.

இளமை

மார்டின் லூதர்! மார்டின் லூதர்!! ஏளனச் சிரிப்பு முதலில், மரணக் கனவு பிறகு, இளம் வயதில் மகிழ்ச்சியில்லை. காரணம், குடும்பம் ஏழ்மையைத் தழுவியது. பள்ளி ஆசிரியரின் பார்வையோ பயங்கரமாயிருந்தது. ஏனெனில் மற்றப் பிள்ளைகளைப்போல் ஆடம்பரமாயில்லாமல் கந்தை யுடுத்தியிருந்தான். கர்ம வீரர்களின் ஆரம்பம் மர்மமாகவே இருந்ததுண்டு என்ற இலக்கணத்துக்கு மார்டின் லூதர் விதி விலக்கா என்ன? நீர்பூத்த நெருப்பு போல், அமைதிகொண்ட கடல் போல், ஆடி நின்ற காற்று போல், அமைதியாய் தன்னை எல்லா வகையாலும் பிறர் மதிக்கத்தக்க மனித