பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மார்ட்டின் லூதர்


யதுதான். இப்போதும் குடிமுழுகிப் போகவில்லை. இன்னும் ஒரு அந்தரங்கக் கதவு இருக்கிறது திறக்க, அதுதான் அப்பீல். அங்கே பார்த்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் ஒரு ஐயாயிரத்தோடு வா!” என்று தன் முட்டாள் தனத்துக்கு மூடு மந்திரம் போடமுடியும். ஆகவே அந்த சிலந்திக் கூண்டில் அகப்பட்டுக் கொள்ளவில்லே.

யாத்திரை

ண்டவன் அருள்கடாட்சத்தைப் பெற்ற அறிஞர்களைக்காண அவாவுற்றான். அவர்களிடம் பலவற்றைத் தெரிந்துகொள்ள ஆசை கொண்டான். மதியால் மக்களை மார்க்க போதனையில் இழுத்துச் சென்று மாபெரிய நன்மைகளைச் செய்து கொண்டிருக்கும் மதத் தலைவர்களைக் காண வேண்டுமெனத் துடித்தான். அவர்களைக் காணும் நாளைத் தன் பிறவியிலேயே ஒரு புனித நாளென நினைத்தான். பந்தபாசங்களற்ற அந்தப் பரமனின் பக்தர்களை நாவார வாழ்த்தி, நெஞ்சார நினைத்து அஞ்சலி செய்ய முடிவுசெய்து கொண்டான். பற்றற்ற ஞானிகளின் பாத சேவையால் தன் பாவங்கள் பஞ்செனப் பறக்கும் என எண்ணி எண்ணி இறுமாந்து உளம் பூரித்து உவகை பூத்தான்.

ஆகவே படித்து முடித்ததும் நேராக ரோமாபுரி சென்றான், தான் படித்த மதத்தலைவர்களைக் காண, மதம் எந்தக் குறிக்கோளோடு அமைக்கப்