பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

15


என்று துணிந்து புதியதோர் பாதையைப் போடத் திட்டமிட்டவன் லூதர் ஒருவன் தான்.

வைராக்கியம்

தம் என்றால் என்ன? மக்களுக்கு அபினியாக விளங்குவதா? சாகடிக்கும் நஞ்சாக விளங்குவதா? அல்லது அவர்கள் அறிவுக்கண்களைத் திறப்பதா, எது உண்மையான மதம் என்பதை ஊர் அறிய உலகறியச் செய்கின்றேன் என்று சூள் உரைத்துக்கொண்டான். மோட்சம் என்பது வெளி வேடத்திலோ, மக்கள் கூட்டத்திலோ யாத்திரிகர்களின் எண்ணிக்கையிலோ இல்லை என்றும், ஆழ்ந்த உள்ளத்தின் கண் உண்டாகும் பக்தியில் உள்ளதென்றும் நம்பினான். அதைத் தீவிர ஆராய்ச்சியின் மூலம் முடிவுகட்ட St. Augustin order of friarல் சேர்ந்து அந்த ஞானியைப்பற்றி நிறையப் படித்தான்.

1512-ம் ஆண்டில் விண்டம்பர்க் (Wintenberg) கலாசாலையில் மதப் பேராசிரியராகச் சேர்ந்தான் அது மனிதர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் கலா சாலை. ஐரோப்பா முழுவகற்கும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கலாசாலை இது ஒன்றுதான். இங்கேதான் ரோம் சர்ச்சி (Rome Church)ல் உள்ளவைகளை நன்றாயுணர்ந்தான். செந்தீயிலிட்டப் புழுவெனத் துடித்தான். அதுமாத்திரமல்ல, அவன் கோபக்கனலை மென்மேலும் கிளப்பியது :-அந்த நேரத்தில் எராஸ்மஸ் (Erasmus) என்பவன் மதத்-