பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

17


அந்தக் கபட சன்யாசி டெட்சாலைத் தன் நாட்டில் துழையக் கூடாகதெனத் தடுத்துவிட்டான். போப்பின் எண்ணங்களையும் ஏற்பாடுகளையும் தவிடு பொடியாகத் தாக்கினான்.

வாதகேசரி

சாதாரண பாமர மக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுமளவுக்கு, தனது சிக்கலான வாதத்தை நேர்படுத்தி எளிய நடையில் ஆணித்தரமாகப் பேசும் ஆற்றல் மிக்கோன் மார்டின் லூதர். வாதப் பிரதிவாதங்களை இவனே எழுப்பித் தக்ககோர் விடையை மக்கள் மனதில் பதிய வைக்கும் பக்குவமறிந்த பேச்சாளி. படித்தவர் முதல் படிக்காத பாமரர்வரை எளிதில் புரிந்து கொள்ளுமளவுக்கு சரளமான சொற்களை நயமான நடையில் சமநிலத்தில் ஓடும் நீர் அருவிபோல் நளினமாகப் பேசும் சொற்செல்வன். பிறருடைய அடுக்குச் சொற்களைக் தான் அடுக்கிப்பார்த்து, சரியாய் அடுக்க முடியாததால் அடுக்குகள் சரித்துவிழுந்து, அதன் அடிவாரத்திலே அகப்பட்டுக் கொண்டு அவதிப்படும் அப்பாவியல்ல அவன். அடுக்குச் சொல் என்று ஆரம்பித்து, சொற்களின் பொருளும் தன்மையுமறியாமல், "சமதருமத்தைச் சாடுவேன்; பொது உடமையைப் பொடிப் பொடியாக்குவேன்", என்று நாத்தடுமாறி உளறிக் கொட்டி, ஊரார் சிரித்தபின் விழித்துக்கொண்டு விழிக்கும் ஊதாரிக் கூட்டம் ஒன்று கிளம்பி இருக்கிறதே நமது நாட்-

2