பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மார்ட்டின் லூதர்



இதைப் பார்த்த கபடசன்யாசி, போப்பின் கையாள் பாபமன்னிப்புச் சீட்டு வியாபாரி, ஏழைகளை ஏமாற்றிக் கடவுள் பெயரால் கள்ளமார்கெட் செய்த கயவன் டெட்சால் எங்கேயோ ஓடி ஒளிந்தான். சீட்டுகளை விற்பாரில்லை. வியாபாரம் குறைந்தது. அதனால் பணம் குறைந்தது. பணம் குறையவே போப்பின் வெறி விஷம்போல் ஏறிற்று. இறுதியாக லூதரை ரோமுக்கு அழைத்தான் போப். அதற்குள் அந்த நாட்டு மன்னன் ஐந்தாம் சேர்லெஸ், லூதரைப்பற்றி எண்ணினான், ஏசினான், சிறையிடுவேன் என்றான். தூக்குக்கயறு உனக்குப் பரிசாகத்தரப்படும் என்றான்.

இந்த உத்திரவுகளைப் பார்த்து நகைத்துக் கொண்டே செல்கிறான் லூதர். குதிரை வீரன் ஒருவன் குறுக்கே வந்தான். தாங்கள்தானே மார்டின் லூதர்? என்று வினவினான். ஆம், என்ன சேதி? என்றான் லூதர். "ஒன்றுமில்லை, போப்பாண்டவர் தங்களுக்கு ஒரு பரிசளிப்பு அனுப்பியிருக்கிறார்." போப்பாண்டவரா? எனக்கா! பரிசா அனுப்பியிருக்கின்றர். உளராதே சரியாகச்சொல். உளரலல்ல, உண்மை உண்மை.

லஞ்சம்

விரோதியின் காலுக்கு வீரப்பட்டயம் கட்டியதைப் போன்றிருக்கின்றது. சிங்கத்தை விருந்துக்கழைக்கும் சிறு நரியுண்டா, உலக அதிசயத்திலே இதுவும் ஒன்றுதான். எதோ அந்தப் பரிசு,