பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

23


மார்டின் லூதர் தனக்களித்த பொன் மலரை வாங்க மறுத்தான். திரும்பிப் போய்விட்டான் வாளேந்தி. திரும்பிப் பார்க்காமல் புறப்பட்டான் தூதர்.

நடுக்கம்

டைத்தெரு, மக்கள் கூட்டம், எங்கும் குசு குசு என்ற பேச்சு, "போப்பாண்டவரை அவமதித்தான் இந்தப் பொல்லாதவன். ஏதோ போதாத காலம் இவனுக்கு அதுவும் பொன் மலராம். தங்கத்தின் உயர்வை அறியாத தரித்திரன். எவ்வளவு புனிதமான உலோகம் பசும்பொன்! கேடு சூழ வேண்டியதற்கு முன் கெடவேண்டிய மதி. இவனை விதி வழி, கெடுமதி அழைத்துச் செல்கிறது. போன ஆள் போப்பினிடம் செய்தியை எட்டவைத்தால் ஒரு வார்த்தையில் சபித்து விடுவார். ஆண்டவன் வேறு, அவர் அடியார் வேறா? அவரேதான் இவர், இவரேதான் அவர். அவர் பரமண்டலத்தில் இருக்கிறர். இவர் பாமர மண்டலத்திலே இருக்கிறார். ஆண்டவன், போப் கண்ணுக்குத் தெரிவார் . போப் பாவிகள் தவிர, மற்ற எல்லாருடைய கண்களுக்கும், தெரிவார். ஆண்டவர் அனைவரிடத்திலேயும் பேச முடியாது. அதனால்தான் போப்பைத் தன் பிரதிநிதியாக்கியிருக்கின்றார். அது ஞானிகளுக்கு மாத்திரந்தான் தெரியும். இந்த அஞ்ஞானி எப்படி அறிவான் அவர் மகிமையை. காட்டுக் கூச்சல் போடுகிறன் சிலர் கைதட்ட இருப்பதால். தான் சாக மருந்துண்கிறான். கண்ணைக்