பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மார்ட்டின் லூதர்


என் முடிவு எனக்கு எவ்வளவு பயங்கரத் தீர்ப்பையளித்தாலும் புன்னகையோடு வரவேற்கிறேன். சாவே வா! என்றழைக்க மாலையோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.

மக்கள் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் செந்தீப்போல், இந்த மதத் தலைவனின் உத்திரவும் நானிட்ட தீயால் நாசமாகட்டும் என்று அந்த போப்பின் உத்திரவை கடைத்தெருவில் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தினான். எரிந்தது சிறிய தீதான். ஆனால் அதில் கத்தோலிக்க மார்க்க மாளிகை சடசடவெனச் சரிந்தது யாருக்குக் தெரியும். போப்பின் உத்திரவு பொசுக்கப்பட்ட போது, அந்தக் காட்சியைக் காணவே பயந்து பதுங்கியவர்கள் எவ்வளவு பேர் ஏன்? எத்தனைக் குதிரைப் பட்டாளங்கள் வருமோ, யார் யாரைக் கொல்லுமோ, எந்தெந்த நிரபராதி உயிரிழக்க நேரிடுமோ, குதிரைக்குத் தெரியுமா? யார் குற்றவாளி என்று. ஆகவே அனைவரும் ஒதுங்கி ஓடினார்கள். அங்காடியிலும் அவன் ஒருவனே தனியாக நிற்கிறான்.

அழைப்பு

மார்டின் லூதரை மக்கள் பின்பற்றுவதைப் பார்த்து, மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், (King of Charles V) இவன் வாதத்தை (Dub) டப் என்ற பார்லிமெண்டில் போப்பாண்டவர் முன்னால் சொல்லவேண்டுமென அழைத்தான். முன்பு தூக்கி