பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

29


மாற்றாரைப் புறங்காணச் செய்த மனிதரில் மாணிக்கத்தை மரணத்தின் கோரப்பற்களுக்கிடையே தள்ளி விட்டோம். மதக்கோட்பாடுகளைத் தன் படுக்கையென நினைத்து அதன் மேல் இஷ்டம் போல் புரண்ட ஈனர்களின் செய்கைக்கு ஈம ஓலை வாசித்த ஏந்தலை இழந்து விட்டோம். என் அருமை மார்டின் லூதரை இழந்தே விட்டேன், என்ற கதறலைக் கேட்கின்றான் லூதர்.

ஆயினும் செல்கிறான் அஞ்சா நெஞ்சன். உனக்கு யார் துணை? நீ யாரை நம்பிப் போகிறாய், என வினவுகின்றனர் நண்பர்கள். அரசனுக்கு சட்டமும் செங்கோலும் வாளேந்திய வீரர்களும் துணை. வீரர்களுக்கு வேகமாய் ஓடும் புரவிகள் துணை, புரவிகளுக்குக் குளம்புகள் துணை. காலடிக் குளம்புகளுக்கு செப்பனிடப்பட்ட பாதை துனை. போப்பாண்டவர்களுக்கு பக்கர்கள் துணை. பக்தர்களுக்கு மக்கள் செலுத்தும் பாதகாணிக்கை துணை, பக்தர்களுக்கு பாபமன்னிப்புச் சீட்டு துணை. ஆனால் எனக்கு அறிவே துணை. என்னையே நான் நம்பிச் செல்கிறேன். வீட்டின் மேல் கவிழ்ந்திருக்கும் ஓடுகளின் எண்ணிக்கைக் கதிகமாகப் பேய்கள் என்னை வழிமறித்து பயமுறுத்தினாலும் என் கொள்கையைச் சொல்லியே தீருவேன்.

“I would go even if there were as many devils as there are tiles on the house roof".மார்டின் லூதர்