பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

31


you will go on teaching and standing fast in truth, if you leave, my death will matter little" "ஆருயிர் சோதரா! நான் மீண்டும் திரும்பி வர முடியாமல் எனது பகைவர்கள் என்னைக் கொன்று விட்டால் நீ பிரசாரத்தை உண்மை நெறியில் நின்று விடாது நடத்து. நீ அதைக் கைவிட்டால் என் சாவு பயனற்று வீணானதாகிவிடும்" என்று சொல்லிவிட்டு மேலும் நடக்கின்றான்.

மன இருள்

ஆனால் எதிரிலே இருந்த கட்டடங்கள் கட்டடங்களாகக் காட்சியளிக்கவில்லை. மனதில் ஏதோ ஒரு குழப்பம் அறிவென்ற ஒரே ஆயுதத்தின் துணைகொண்டு செல்கிறான். இதே வேலை செய்யத் துணிந்த இத்தாலிய இளைஞன் சவன ரோலாவைத் தூக்கிலிட்ட காட்சி தன் கண்முன் தோன்றுகிறது. ப்ரூனோவைக் கொளுத்திய தீ தன் உடலைச் சுற்றுவதைப்போன்ற ஓர் உணர்ச்சி. ஜான் விக்லிக் வழி வந்த ஜான் பாட்லியை நடுக்தெருவில் தீ மூட்டி அதில் தள்ளி, ஒரு பக்கம் மன்னனும், மற்றோர் பக்கம் மத குருவும் தீயை ஏறத்தள்ளிய காட்சி தன் கண்முன் தாண்டவமாடிற்று. எனினும் அவன் உள்ளே செல்லத் தீர்மானித்துவிட்டான்.

"நீதியை நிலைநாட்டுகிறேன்" அல்லது அந்தப் பாராளுமன்றத்தின் பாபக் கறையை என் இரத்தத்தால் கழுவுகின்றேன். அதற்காக நீங்கள் உங்கள் கண்ணீரால் கழுவ வேண்டாம், நமது