பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை

ஏய்த்துப் பிழைப்பவனுக்கு எச்சரிக்கை மணியடித்து, ஏழையை பணக்காரன் இழித்துப் பழித்துக் கேவலமாக மதிப்பதைப் போக்கி, சமதர்மம் பேசிய சான்றோர்-மனிதனை மனிதன் அடிமைகொண்டு மிருகமாக நடத்துவதைக் கண்டித்து அடிமை விலங்கை அறுத்தெறிந்த அறிஞர்-சொந்த நாட்டிலே மக்கள் தங்கள் சுபிட்சத்தையும், சுகவாழ்வையுமிழந்து அன்னியன் ஆட்சியிலே அல்லலுற்றுக் கிடக்கையிலே தியாகசொரூபமாய், தீரத்துடன் போராடி சுதந்தரத்தை வாங்கித்தந்த தியாகிகள்-மூடப் பழக்கத்துடன் மக்கள் ஐக்கியமாயிருப்பதறிந்து முறையாக, படிப்படியாக பகுத்தறிவுப் பிரசாரம் செய்து, பாடுபட்ட பகுத்தறிவு வாதிகள்-ஆகிய இவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களே நாம் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் சமர்ப்பிக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு அறிஞர், அண்ணாதுரை அவர்களின் புத்தகங்களை அடுக்கடுக்காக அடுத்தடுத்து வெளியிட்டபொழுதே உண்டாயிற்று.