பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

35



கேள்வி :- அவை உன்னுடையவைதானா ?

பதில் :- ஆம்.

கேள்வி :- உனக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறோம். நன்றாய் யோசித்துக் கூறு.

பதில் :- சரி. சபை கலைந்தது.

மறு நாள் காலை.

கேள்வி :- ஏதாவது மாற்றமுண்டா?

பதில் :- இல்லை. என் கருத்தே சரி. என்றான்.

மேலும் போப்பின் கொடுமைகளை எடுத்துச் சொன்னான். ஒரு தனி மனிதனுக்காக அல்ல மதம். மக்களுக்காக மதம். பாவம் செய்த மக்களை போப் மன்னிக்கிறார். போப்பின் அக்ரமங்களை யார் மன்னிப்பது ? மதத்தால் மக்கள் அழிந்துவிடக்கூடாது. அறிவு பெறவேண்டும். ஆராய்ச்சிக் கூடமாகவேண்டும். பயம் தெளியவேண்டும். பாபத் தூண்டுதலிலிருந்து மக்கள் தப்பிவிடவேண்டும். மரணமே வருவதானாலும் மக்களுக்குத் தைரியம் வேண்டும். நீதிக்காகப் போரிடவேண்டும். நேர்மையை நிலைநாட்டவேண்டும். சபை முன் ஒன்று, சாதாரண மக்கள் முன் ஒன்று, என்று புறம் பேசாதிருக்கவேண்டும். பயந்தவரை மிஞ்சி, பகைவரைக் கெஞ்சி வாழும் நிலை அடியோடு மாறவேண்டும், பல நாட்கள் பட்டினியில் கிடந்த மக்கள் அறுவடைக் காலத்தில் அரை வயிற்றுச் சோற்றுக்கு