பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

37நான் ஒரு நல்ல கிருஸ்துவனாக, அபிமானத்தின் தாயகமாக, அன்பின் சின்னமாக, அருளாளன் இயேசுவின் உண்மைத் தொண்டனாக இருக்க எண்ணுகின்றேன்.

மரச்சிலுவை இயேசுவின் உயிரைப் போக்கியது. இதோ இந்த பொற்சிலுவை போப்பை ராஜ போகத்தில் வைத்திருக்கிறது. இயேசுவின் முடிவு கண்டு எந்த நல்ல கிருஸ்தவனும் ரத்தக் கண்ணீர் சிந்துவான். ஆனால், அந்த கோர நிகழ்ச்சியைக் தன் இன்ப வாழ்வின் ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் போப். ஆகவே எதிர்க்கிறேன்,

தாய் ஈன்றால், தந்தை படிக்க வைக்கிறான். மதம் அவனை மனிதனாக்க வேண்டும். மதம் ஓர் வியாபாரப் பொருளல்ல. தனியுடைமையுமல்ல. அரசர் ஐந்தாம் சேர்லெஸ் அவர்களின் ஆனையென்ற முத்திரையே அதற்கிருந்தாலும், இன்று நீர்பூத்த நெருப்புபோல் இருக்கும் மக்கள், நாளை எரிமலையானாலும் ஆவார்கள். அன்றந்த ஆவேச அணையை ஐந்து விரலால் தடுத்துவிட முடியும் என்பது வீராப்பில் முடியும், விவேகமற்ற செயல், வீரம் எல்லாவற்றிற்கும் பயன்படாது. விவேகம் வீரத்தை எத்தனையோவிடங்களில் அழித்துவிட்டிருக்கிறது. அதை வேந்தர் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆத்திரத்தால் நாம் அறிவை இழந்து விடக்கூடாது, என்று சொல்லி வாய் மூடுவதற்குள் திட்டினார்கள் சபைபோர்கள். சீறினான்