பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மார்ட்டின் லூதர்


சிங்காதன பொம்மை. சொல்லம்பால் தாக்கின அங்கு கூடியிருந்த சோற்றுக் துருத்திகள். பட படவெனப் பல்லைக் கடித்தன அப்பாராள் வோனைத் தாங்கி நின்ற மாமிச மலைகள்,

ஆனால் அங்கு நின்ற வீரன் ஒருவன் மட்டிலும் லூதரின் ஆணித்தரமான பேச்சைக் கேட்டு ஆமோதிப்பவன் போல் தலை அசைத்துவிட்டான், அதைப் பார்த்து கொக்கரித்தெழுந்தான் கோமான். ஏன் தலையாட்டினாய்! எங்களைவிட உனக்கு அதிகம் தெரியுமோ! உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டத் தலையாட்டும் சங்கீத ரசிகன்போல.

தன்னையுமறியாமல் தலையாட்டி விட்டான் அப்பேதை. அது மன்னன் மாளிகை, அதில் தான் ஓர் பணியாள். நீதிக்கும் அநீதிக்கும் நீர்மட்டம் பார்க்கும் நேரம். அதிலும் தான் செய்தது மன்னனுக்கு முற்றிலும் விரோதமான செயல் என்பதை மறந்தே போனான். வெடித்த குரலோடு கேட்ட வேந்தன் வினாவுக்குத் தக்கதோர் பதிலளிக்கத் தன்னைத் தயார் செய்து கொண்டான். அந்த சமயோசித புத்திக்காரன்.

ஒரு கையில் வாள், மற்றோர் கையில் கேடயம் இந்த நிலையில் முகத்தில் ஈயாடியது. இரு கைக்கும் வேலை. ஆயுதங்களை மறு உத்திரவுவரை கீழே வைக்கக்கூடாது. இது இராணுவக் தலைவனின் கண்டிப்பான கட்டளை. வேறுவழி