பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

39


யில்லை. ஆதலால் முகத்தில் உட்கார்ந்த ஈயைத் தலையாட்டியே துரத்திவிட்டேன் தார்வேந்தே! தவறாக எண்ணக்கூடாது. தமியேனை மன்னிக்க வேண்டும். "பிழைத்துப்போ!" புரவலன் இட்ட பிச்சை. தப்பினான் வீரன்.

அவன் ஒருவனாகிலும் உன்னை ஆதரித்தானோ என்னவோ என்று பார்த்தோம். அதுவுமில்லை, அதுவும் பொய்த்துவிட்டது. இப்போதென்ன சொல்கிறாய். இப்போதும் அதையே சொல்கிறேன். என்னை நீங்கள் எவ்வளவு பயமுறுத்தினாலும் நான் என் கருத்துக்களை சரி, சரி என்றுதான் சொல்வேன். என் கருத்துக்கள் தவறு என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் தக்க ஆதாரங்களைக் கூறுங்கள். என்னை நீங்கள் கொன்றுவிடலாம். ஆனால் விளையப்போகும் பயன், விளக்கை அனைத்துவிட்டு இருட்டைக் தானாக வரவழைக்கப் போகிறீர்கள் என்பதுதான். ஓடி ஒளியும் கோழையல்ல நான். இங்கே நான் தனியாக நிற்கிறேன். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் என்னேக் காப்பாற்றுவார், ஆமென். “Here I stand. I cannot do otherwise, God help me, Amen' என்று கூறித் தன் வாதத்தை முடித்தான்.

மக்கள்

இதற்கிடையில் வெளியே மறுகாட் காலை கூடிய மக்கள், நேற்று உள்ளே சென்ற லூதர்