பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மார்டின் லூதர்


இன்றுவரை வெளியே வரவில்லை. சவன ரோலாவின் சந்ததியல்லவா இவன். அவனை அனுப்பிய இடத்துக்கே இவனையும் அனுப்பியிருப்பார்கள். அல்லது ப்ரூனோவைப் பொசுக்கிய தீயில் கொஞ்சம் மிகுதியிருக்கும் அதில் தள்ளியிருப்பார்கள். ஏதோ ஒரு அதிசயத் செய்திக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்களைப்போலக் காத்துக்கொண்டிருந்தார்கள். கோட்டைச் சுவர்களை அணுக முடியாது. அவ்வளவு காவல்.

உயிரோடு வெளியே வந்துவிட்டான். மாண்ளவன் மீண்டான் என்றனர் மக்கள். மலைவாயில் மறைக்க சூரியன் கீழ்வாயிலில் தோன்றினான் என்றனர். குதூகலக் கடலில் குதித்தான் பிரடரிக். அணைத்துக்கொண்டான். ஆரவாரித்தான். வாள் முனையைத் தன் வாயசைப்பால் வென்ற வீரனே! வருக! வருக! என்று வரவேற்றனர் மக்கள். ஐந்தாம் சேர்லெசை தன் அறிவால் பணியவைத்த அஞ்சாநெஞ்சனே வருக! வருக! புலிவேடம் போட்டுத் திரிந்த பொல்லாத போப்பின் கதியைக் கலங்கவைத்த கர்மவீரனே! வருக! வருக ! மக்கள் துன்பத்தைத் துடைத்த மாவீரனே! மார்டின் லூதரே! வருக! வருக! மதத்தை அறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து அக்ரமக்காரர்களின் அயோக்கியத்தனத்தை அஸ்தமிக்கச் செய்த அறிவின் குன்றே வருக! வருக! யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று எக்காளமிட்டிருந்த இதாலி கழுகுகளில் இழிதன்மையை ஈட்டியால்