பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மார்ட்டின் லூதர்


னர். பல மன்றங்கள் துக்கச் செய்தியை அனுப்பியது. எனினும் லூதரை இன்னும் காண்கிறார்கள் ப்ராடெஸ்டெண்டு மத உருவிலே. லூதரின் கல்லறை இன்னும் பல மத குருமார்களுக்குச் சிங்கக் கனவாகத் தோன்றுகிறது ஐரோப்பாவில்.

சட்ட உரிமை

சேர்லெசுக்குப் பிறகு வந்த மன்னனால்-ப்ராடெஸ்டெண்டு இயக்கம் 1555-ல் சட்ட அனுமதி பெற்று நாட்டில் உலவியது. அகில ஐரோப்பாவிலும் பரவி இருந்த Reformation of Europe ஐரோப்பாவின் சீர்திருத்தம் என்ற இயக்கத்தின் தந்தை இவன்தான்.

லூதரின் வாழ்நாள் முடிந்தது. ஆனால் அவன் நிலைநாட்டிய கொள்கைகள் இன்னும் நிலவுகின்றன. வாழ்க லூதரின் அஞ்சாத வீரம்!

மணமே செய்து கொள்ளாத-உலக இன்பத்தை ஒன்றையுமே அறியாத-சேய் வாழ மருந்துண்ணும் தாய்போல் மக்களை உய்விக்கக் தன் வாழ்நாள் முழுவதும், வாளோடு, சட்டத்தோடு, போப்பாண்டவரோடு, மதக் கொடுமையோடு, மதக் கூண்டில் அடைக்கப்பட்ட மக்களோடு அடிக்கு அடி போராடி வெற்றிகண்ட வீரன் லூதரின் கல்லறையில் இப்படி எழுதி வைத்திருக்கின்றான் நண்பன்.