பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மார்டின் லூதர்

காலம்

15-வது நூற்றாண்டு வரையிலும் சமுதாயக் கடலில் கொந்தளிப்பில்லாத ஐரோப்பா கண்டம் 16-வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஒரே கொந்தளிப்பும், புயல் காற்றும், நாவாய்கள் திசை மாறிப் போவதுமான பயங்கர நிலைக்குட்பட்டது.

அதுவரை மன்னர்கள் அரியாசனத்தின் பக்கத்தில் சரியாசனத்தில் வீற்றிருந்த போப் பரம்பரை, "நான் நினைத்து சூட்டினால் முடி, இல்லையானால் சாபம் பிடி," என்று வேந்தர்களை விரட்டித் திரிந்த வீணர்கள் ஊதிய மகுடிக்குப் படமெடுத்தாடிய பாராளு மன்னனைத் தங்களுக்கு அடிமையாக்கி வைத்திருந்த போப்பாண்டவர்கள் பவனி வந்த நேரம்.

தன் புன்சிரிப்பால் பாமரரைப் பரமண்டலம் அனுப்ப முடியும் என்றும், சினத்தால் அவர்கள் வாழ்க்கையை சிதைத்து சித்ரவதை செய்து சீரழிக்க முடியும் என்றும் நினைத்துக்கொண்டிருக்க மதத் தலைவர்கள், அவை அவ்வளவும் உண்மைதானென நம்பிக்கொண்டிருந்த மக்கள் வாழ்ந்த நேரம். அறியாமையால் பிழை செய்த