பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் குறைதான் 103

பொதுளும். கீழ்நோக்கிக் குவிந்த மொட்டாக அல்லவா தாம் நம் மனத்தை வைத்திருக்கிருேம்? இதனை மேல் நோக்கித் திருப்பி மலரச் செய்தால் அப்போது அம்பிகை யின் தண்ணருள் வெள்ளம் தேங்கச் செய்யலாம்.

ஆகவே நாம் அமைதி பெற்று இன்புரு மல் இருப் பதற்குக் காரணம் அம்மையின் குற்றம் அன்று நம்முடைய குற்றந்தான். அவளுடைய திருக்கோலத்தைத் தரிசிக்கக் கண்ணும், திருப்புகழைக் கேட்கக் காதும், பெருமையை உணர்ந்து தியானிக்க மனமும் இருக்கின்றன. அந்தக் கருவிகள் இருந்தும் நாம் அவற்றை அந்த வழியில் பயன்படுத்துவதில்லை. எதை எதையோ பார்த்து ஆசைப் படுகிருேம். எதை எதையோ கேட்டு மயங்குகிருேம். கருவி கரணங்கள் யாவும் அன்னையின் தொண்டிலே ஈடுபடுத்துவதற்காகக் கிடைத்தவை.

' உடம்பினைப் பெற்ற பயனுவ தெல்லாம்

உடம்பினில் உத்தமனைக் காண்'

என்றபடி இந்த உடம்பை அம்பிகையின் திருக்காட்சியைப் பெறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை மறந்து வீணே வாழ்நாளைக் கழித்து விடுகிருேம். .

இது யார் குறை? அன்னையின் குறையா? இல்லை. இல்லை; நம் குறைதான். இதைச் சொல்லுகிருர் அபிராமி பட்டர்.

எம்பெருமாட்டி நம்மை ஆட்கொள்ளவேண்டுமென்று கரசரளுதி அவயவங்களுட்ன் காட்சி தருகிருள். அவள் நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்ருல் அவளிடம் புகல்புக வேண்டும். இன்ன காலம், இன்ன இடம் என்ற வரையறை. யின்றி எங்கே எப்போது யார் சரணுகதி அடைந்தாலும் அவரைக் காப்பாற்றுவதே தன் கடமையாக ஏற்றுக் கொண்டிருக்கிருள் அம்பிகை. அவளுடைய திருவடியைப்