பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் குறைதான் - 107

வந்தது. இது நீங்கும் காலம் ஒன்று உண்டல்லவா? அப்போது நம் காலக் கணக்கை வைத்திருக்கும் யமன் உடம்பினின்றும் உயிரைப் பிரித்துக்கொண்டு போக வருவானே! இங்கே எவ்வளவு இன்பமாக வாழ்ந்தாலும் இறுதியில் யம வாதனைக்கு உட்படத்தானே வேண்டும்:இப்படி ஒரு கேள்வி எழலாம். அந்த அச்சமும் வேண்டிய தில்லை என்கிருர் அ பிராமிபட்டர். .

திருக்கடவூரில் நடந்த பழைய கதை நமக்குத் தெரியும். மார்க்கண்டேயனைப் பற்றுவதற்கு யமன் வந்தான். அவன் மேல் பாசத்தையும் வீசிவிட்டான். அப்போது கால காலணுகிய இறைவன் தன் காலால் உதைத்து யமன வீழ்த்தினன். யமனுக்கு மரணம் உண்டான தலத்தில்தான் அபிராமியம்மை எழுந்தருளியிருக்கிருள். முன்பு பட்ட சூடு யமனுக்கு மறந்து போகுமா? ஒருகால் அவன் வந்தால் அம்பிகை என்ன செய்வாள்? அவள் தன் திருவடியைத் தூக்கி உதைக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் கடைக் கண்ணுல் அவனை ஒரு பார்வை பார்த்தால் போதும். அவன் அலறியடித்துக் கொண்டு ஓடிவிடுவான். வாள் வீச்சுப்போலே அது அவனுடைய பலத்தையெல்லாம் குலைத்துவிடும். ஒருகால் அவன் தவறிப் பக்தனைச் சிறிது அழைத்துச் சென்ருலும் அம்பிகையின் திருக்கடைக்கண் பார்வை அவனிடத்திலிருந்து மீட்டுவிடும்.

காலனிடம் செல்லாமல் மீள்வதற்கு எம்பிராட்டியின் கடைவிழிப் பார்வை துணையாக இருக்கிறது.

அந்தகன்பால் மீளுகைக்கு உன்றன்விழியின்

க.ை உண்டு. :

tயமனிடம் செல்லாமல் இன்ப நிலையை அடைவதற்கு உன்னுடைய கடைக்கண் பார்வை இருக்கிறது.