பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் குறைதான் 111

திரிபுராந்தகனுக்கே துணை நின்று அசுரர்களை மாய்க்க வலிமையருளும் பெருமாட்டி எனக்கு வரும் துன்பத்தை நீக்கி நன்மை செய்வது பெரிய காரியம் அன்று என்று தோன்றும்படி இதனைக் கூறினர்.

z ஆளுகைக்கு உன்றன் அடித்தா

மரைகள் உண்டு; அந்தகன்பால் மீளுகைக்கு உன்றன் விழியின்

கடை உண்டு; மேல்இவற்றின் மூளுகைக்கு என்குறை; நின்குறை

யேஅன்று, முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்

லான்பங்கில் வாள் நுதலே!

(திரிபுரங்களும் அழிவதற்காகத் திருமாலாகிய அம்பைத் தொடுத்த மேருமலையாகிய வில்லையுடைய சிவபெருமானது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஒளி படர்ந்த நெற்றியை உடைய அபிராமி அம்மிையே! அடியேனே ஆட்கொள்ளுவதற்கு நின் திருவடித்தாமரை. மலர்கள் இருக்கின்றன; காலனிடம் செல்லாமல் மீண்டும் உய்வதற்கு உதவியாக நின் கடைக்கண் பார்வை இருக் கிறது. இவற்ருேடு தொடர்பு பெற்றுக்கொள்வதற்கு முடி யாமல் இருப்பது என் குறைதான்; நின் திருவருட் குறையே அன்று. х -

அந்தகன் - யமன், அந்தகன்பால் செல்லாமல் மீளுகைக்கு என்று விரிக்கவேண்டும். விழியின் கடை என்றது ஆகுபெயராய்க் கடைக்கண் பார்வையைக் குறித் தது. இவற்றில் மூளுகைக்கு முடியாமல் நிற்றற்குக் காரணம் என் குறை என்று கொள்ளவேண்டும். பங்கு - வாமபாகம், வாள் - ஒளி. -

அம்பிகை தன்னை அண்டுபவருக்கு அருள் செய்யக் காத்து நிற்கிருள் என்பது கருத்து. -

இது அபிராமி அந்தாதியில் 39- ஆவது பாடல்.