பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய் புண்ணியம்

அன்னையின் திருவருளைப் பெருமல் இருப்பவர்களில் இரண்டு வகையினர் உண்டு. அவள் அருளைப் பற்றிச் சிந்திக்காமல் அப்படி ஒன்று தமக்கு வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வாழ்கிறவர்கள் ஒருவகை. அவள் திருவருள் கிடைக்கவில்லையே என்று ஏங்கி வாடுபவர்கள் ஒரு வகை. எம்பெருமாட்டியின் திருவருள் கிடைக்க வில்லையே என்று ஏங்குவதும், உன் திருவருளே வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்வதும், அதற் காக வேண்டிய முயற்சிகளைச் செய்வதும் பக்தியின் கூறு பாடுகள். தன் காதலனைக் கண்டு குலாவுவதும், காணுமல் பிரிவினல் வருந்துவதும் காதலின் வகைகளே. அத்தகை. யனவே பக்தியினல் உண்டாகும் உணர்ச்சிகளும். -

அம்பிகையின் திருமேனியைத் தரிசிக்கவும், அவளு டைய திருவுருவைப் பூசிக்கவும், அவளுடைய பிரபாவங் களைப் பேசவும், அவளுடைய அடியார்களுடன் கூடியிருக் கவும் நாம் பேறு பெற்ருேமே என்று எண்ணி மகிழ்வது பக்தர்களுக்கு இயல்பு: சிறந்த பக்தராகவில்லையே, அன்னையின் சுடருருவத்தை உண்முகத்தே தரிசிக்கக் கொடுத்துவைக்கவில்லையே, நம்மை மறந்து அவளுடைய தியானத்தில் ஈடுபடவில்லையே என்று குறைப்படுவதும் பக்தர்களுக்கு இயல்பே. கிடைத்ததை எண்ணி மகிழ்வது ஒரு மன நிலையானல், கிடைக்காததை எண்ணி ஏங்கி மருகுவது மற்ருெரு நிலை. இரண்டும் மாறி மாறிப் பக்தர் களுக்கு உண்டாவது உண்டு. தம்மினும் தாழ்ந்தவரைக் கண்டும், உலகியலில் உழல்பவரைக் கண்டும் தாம்