பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய் புண்ணியம் 115

என்பது எல்லாக் கடமைகளுக்கும் பொதுவான விதி. அம்மையை வழிபடுவதற்கு முதல் நியதி நம் உள்ளத்தில் அதற்குரிய எண்ணம் தோன்ற வேண்டும். இந்தப் பிறவி யில் அந்த எண்ணம் தோன்றுவதற்கு முற்பிறவியிலே புண்ணியம் செய்திருக்கவேண்டும். சென்ற ஆண்டு அவரைக்கொடி போட்டு நெற்றெடுத்து வைத்திருந்தால் இந்த ஆண்டில் விதையை நடலாம்; அதைப் பந்தலில் படரச் செய்யலாம்; பிறகு காயைப் பறிக்கலாம். அவ் வண்ணமே போன பிறப்பில் புண்ணியச் செயல் புரிந்திருந் தால் இந்தப் பிறப்பில் எண்ணலாம்; எண்ணி அன்பு பூணலாம்; அதன்பின் அம்பிகையைக் காணலாம். வித்து முற்பிறவியிலே எடுப்பது; விளைவு இந்தப் பிறவியிலே.

'அன்பு பூணு தற்கு எண்ணிய எண்ணம் என்கிரு.ர். மனம் இப்போது எத்தனையோ சுமைகளைச் சுமந்து கொண் டிருக்கிறது. பைத்தியம் பிடித்தவன் ஒட்டை உடைசல் களைச் சுமந்து கொண்டிருப்பதைப் போல, உலகப் பித்துப் பிடித்த மனம் வேண்டாதவற்றையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறது. அழகற்று அழுக்குற்று நிற்கிறது. இது தூயதாகி அணியும் பூண வேண்டும். தம்மை அலங் கரித்துக் கொள்ளும் மகளிர் நீராடித் தூய உடை உடுத்து நல்ல அணிகலன்களை அணிந்து கொண்டால் பார்க்க அழகாக இருக்கும். மனமும் பிரபஞ்சப்பற்று என்னும் அழுக்கைப் போக்கி நல்ல எண்ணத்தை உடுத்து அன்பைப் பூணவேண்டும். அன்பையன்றி உள்ளத்துக்கு வேறு அணிகலன் இல்லை. ஆதலின் அன்பு பூணுதற்கு” என்கிரு.ர். தேவியைக் காண அன்பு பூணவேண்டும் என்கிரு.ர். அந்தத் தேவியை வருணிக்கிருர், -

தேவி மூன்று கண்களை உடையவள். சந்திரன், சூரியன், அக்கினி என்னும் முச்சுடர்களும் அவள் திருவிழி களாக இருக்கின்றன. அம்பிகை கண் விழித்தால்தான்