பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய் புண்ணியம் 117

எங்களுக்குத் தெய்வமாகிய பிராட்டி தேவர் வணங் கும் பெரியவள்" என்று சொல்லிப் பெருமைப்படுகிறர்

. - • TT سا مسا لبان

தேவர்கள் பேணும் பிராட்டியாகவும், எம்பெருமாட்டி, யாகவும் இருப்பதைக் கொண்டு அவள் எல்லோருக்கும் எளியள் என்று சொல்லலாமா? இல்லை இல்லை. புறத் தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க' என்று பாடுவார் மணிவாசக்ர். அறியாமை இருள் படர்ந்து நெஞ்சில் அன்பில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னை எளியாள் அல்லள். அந்த நெஞ்சில் அவளைக் காண இயலாது. "அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கு அவள். பேதமையிருள் படர்ந்த பேய் மனத்தில் அவளைக் காண ஒண்ணுது. அதற்கும் அவளுக்கும் நெடுந்துாரம். .

பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை.

காணுதற்கு நெருங்கியவளல்லாத கன்னியென்றது, நெடுந்துாரத்தில் இருப்பவள் என்பதையே வேறு வகை யிலே சொன்னபடி உலகமெல்லாம் ஈன்றும் இன்னும் அவள் கன்னியாகவே, புதுமைப் பொலிவு மாருமலே இருக்கிருள். . . . .

தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் உரிய பிராட்டியை அறியாமையை உடையவர்கள் அணுகவொண்ணுமல் சேய்மையில் நிற்கும் கன்னியை, காணவேண்டும் அதற்குரிய அன்பு பூணவேண்டும் என்று எண்ணிய எண்ணம் புண்ணியத்தின் பயனல் தோன்றுவது; அந்தப் புண்ணியம் நமக்கு இருக்கிறது என்று பெருமிதம் அடைகிருர், - ,

- வாணுதல் கண்ணியை விண்ணவர்

யாவரும் வந்துஇறைஞ்சிப்