பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மாலே பூண்ட மலர்

எம்பெருமாட்டியின் திருவடிகளில் தம் பாமாலை சேர்ந்து விளங்குவதல்ை அவருக்கு ஒரு பெருமிதம் உண்டாயிற்று. ஆனல் அதே சமயத்தில் ஒரு வியப்பும் உண்டாகிறது. அவருடைய நிலை என்ன! அம்பிகையின் நிலை என்ன! அவருடைய மொழிகள் அன்னையின் திருவடியில் தங்கும் தகுதியைப் பெற்று அங்கே சேர்ந்தனவா? இல்லை, இல்லை; எம்பெருமாட்டியின் கருணையினுல்தான் அவை அங்கே இணைந்தன. அவருடைய பாடல்கள் அம்பிகையின் தாளே அடையும் தகுதி அமைந்தன என்று அவர் நினைக்கவில்லை. அன்னை பெருங் கருணையால், 'நம்முடைய அன்புக்குகந்த பிள்ளை கட்டிய மாலை ஆயிற்றே!' என்று அவற்றை ஏற்றுக்கொண்டாள் என்பது அவருடைய எண்ணம். மூவரைப் பெற்ற அன்னை யாகிய அவளுக்கு இது ஒரு பொருளா? ஆனலும் இம் மாலையை அவள் ஏற்றுக்கொண்டாள். -

தம்முடைய புன்மொழிகளுக்குக் கிடைத்த பேற்றை எண்ணி அபிராமிபட்டர் வியக்கிருர்; ' இந்தப் புன்மொழி களுக்கும் இத்தனை உயர்வு வந்ததே! என்று நகைக் கிருர். ‘எம்பெருமாட்டியே, ஒன்றுக்கும் பற்ருதவன் அடியேன். என்னுடைய நாக்கு எச்சிலை உமிழ்வது எதை எ தையோ உண்ணுவது; எதை எதையோ உரைப்பது; அழுக்கு நிறைந்தது; என். அழுக்கு மனத்தில தோன்றும் அழுக்கான எண்ணங்களை அழுக்கான மொழிகளாக்கி வெளியிடுவது. இத்தகைய இழிந்த நாக்கில் தங்கி நின்ற வார்த்தைகளே உன் தோத்திரமாக வந்தன. அந்த மொழிகளில் சொல்நயம் உண்டா? பொருள்நயம் உண்டா? சாரம் இல்லாத பொலிவற்ற புன்மொழிகள் அவை. நான் குணமற்றவன். என் நாக்கு அழுக்குடையது. அதில் தோன்றியவையோ புன் மொழிகள். அப்படி யிருந்தும் நீ அவற்றை உன் திருவடிகளில் மாலையாக ஏற்றுக்கொண்டாய். எளியேன். நாவிலே தங்கியிருந்த